கோவிட்-19 கொறோனா வைரஸ் தொற்றியதாகப் மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் வைரஸ் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றியவர்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் தவிரத் தற்போது 111 பேர் மருத்துவமனையில் பராமரிக்கப்படுகிறார்கள். வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் 4 பேரும் அடங்குகின்றார்கள்.