ரொறன்றோ மாநகரத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள் 30 க்கும் அதிகமானோருக்கு கொறொனா என்று அழைக்கப்பட்ட கோவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் 12 பேர், தாதிகள் 13 பேர் ஆகியோரும், வேறு மருத்துவ பணியாளர்கள் ஆறு பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ரொறன்றோ மாநகர பொதுச் சுகாதார மருத்துவர் ஐலீன் டி வில்லா (Eileen de Villa) கூறினார்.
ரொறன்றோ பொதுச் சுகாதார அமைப்பின் பணியாளர்கள் 8 பேர் வைரஸ் தொற்றிய நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்த பணியாளர்களும் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Comments
Post a Comment