Skip to main content

Posts

Showing posts from June, 2020

குபெக் பொதுப்போக்குவரத்தில் கட்டாயமாகும் முகக் கவசம்!

குபெக்கில் பொதுப்போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது ஜூலை 13ம் நாள் முதல் கட்டாயமாக்கப்படுவதாக அம்மாகாண முதல்வர் François Legault  இன்று அறிவித்தார். கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம், இன்னும் இரண்டு வாரங்களில் அகவை 12க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்படும் நிலையில், அனைவரும் பழக்கத்திற்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும் என்று Legault நம்பிக்கை வெளியிட்டார். எனினும் பொதுப் போக்குவரத்தின் போது முகக் கவசம் அணியாதவர்கள் ஜூலை 27ம் நாள் முதல் பயணத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார். குபெக்கில் கடந்த 24 மணிநேரத்தில் 68 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டது. இத்துடன் குபெக்கில் தொற்றால் பாதி;க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,458 ஆக அதிகரித்தது. இவர்களில் பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் பிந்திய 18 இழப்புக்களுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5503 ஆக உயர்வடைந்தது.

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஒன்றாரியோவின் பத்து சுகாதாரப் பிரிவுகளில் தொற்றுக்கள் இல்லை

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்குறித்து நேற்று மேற்கொள்ளப்பட்ட 27,511 பரிசோதனைகளில் 189 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன. இது நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கையில் 0.6 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10 இழப்புக்களும் பதிவாகியுள்ளன. இத்துடன் மாகாணத்தில் இனம் காணப்பட்ட மொத்த தொற்றுக்கள் 34,205 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 86.3 சதவீதமான 29,528 பேர் குணமடைந்துள்ளனர். இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 2641 ஆக உயர்வடைந்துள்ளது. ஒன்றாரியோவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக 2036 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 270 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை யாவும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன. ஒன்றாரியோவில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 27 இல் ஐந்திற்கும் குறைவாகவும், அவற்றில் பத்துப் பிரிவுகளில் எவ்வித தொற்றுக்களும் நேற்றைய தினம் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூத்த ஒலிபரப்பாளர் திரு.சி.நடராஜசிவம் காலமானார்.

இலங்கை வானொலித்துறையில் மூத்த ஒலிப்பரப்பாளரும், கலைஞருமான திரு.சி.நடராஜசிவம் இன்று ஜூன் 24ம் நாள் கொழும்பில் காலமானார். இவரது ஊடகப் பயணத்தில் இலங்கை வானொலியின் மூத்த ஒலிப்பாளராக இருந்த அவர், பின்னர் கொழும்பில் ஆரம்பமாகிய ஆசிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையான சூரியன் பண்பலை வானொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளராகவும், ஆலோசகராகவும் பொறுப்பு வகித்தார். ஊடகத்துறை மட்டுமன்றி திரைப்படத்துறையிலும், நாடகத்துறையிலும் சிறந்த கலைஞராக திகழ்ந்த நடராஜசிவம், தமிழ் நாடகத்துறை மட்டுமன்றி அவர் சிங்கள நாடகத்துறையிலும் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோவில் மற்றுமொரு குறைவான தொற்றுக்கள் பதிவு!

ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 தொடர்பான 23,207 பரிசோதனைகளில் 163 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன. இது இரண்டவது குறைவான தொற்றுக்களின் எண்ணிக்கை குறித்த பதிவாகும். கடந்த 24 மணிநேரத்தில் 10 இழப்புக்களும் பிந்திய அறிக்கையில் தவறவிடப்பட்ட இரண்டு என்று 12 மரணங்கள் பதிவாகின. இத்துடன் ஒன்றாரியோவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,016 ஆக அதிகரித்தது. இவர்களில் 86.2 சதவீதமான 29,336 பேர் குணமடைந்துள்ளதுடன், 2631 பேர் மரணித்துள்ளனர். இதேவேளை இன்றைய தினம் ரொறன்ரோ மற்றும் பீல்ப் பிராந்தியங்களில் மாகாண அரசின் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டுத் தளர்வு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிந்திய அறிக்கையில் பீல்ப் பிராந்தியத்தில் 33 தொற்றுக்களும், ரொறன்ரோவில் 71 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. எனினும் இதுவரை இரண்டாம் கட்ட தளர்வு அமுல்ப் படுத்தப்படாமல் இருக்கும் வின்ட்சரில், இன்று ஐந்து தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோவில் ஜூலை 15வரை அவசரகால நிலைப் பிரகணம் நீடிப்பு

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்றாரியோ மாகாண அரசால் அமுல்ப்படுத்தப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணம் ஜூலை 15ம் நாள் வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இன்று காலையில் ஆரம்பமான சட்டசபை அமர்வில் முன்வைக்கப்பட்ட இப்பிரேணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த நீடிப்பானது கொறோனா தொற்றைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் கடைசி நீடிப்பாக இருக்கும் என்று ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டார். இதேவேளை இன்றைய தினம் ரொறண்ரோ மற்றும் பீல்ப் பிராந்தியங்களில் மாகாண அரசின் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டுத் தளர்வு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிக்கோவின் தெற்கே சுனாமி !

மெக்சிக்கோவின் தென்பகுதியில் உள்ள  Oaxaca  மாநிலத்தின் இன்று ஏற்பட்ட7.4 மெக்னிரியூட் அளவிலான நிலநடுக்கத்தையடுத்து சுனாமித் தாக்கம் ஏற்பட்டது. இதுவரை குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்;. Huatulco  கடலில் இரண்டு மீற்றர் உயரமான சுனாமி அலைகள் எழுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலதிக சேத விபரங்கள் இச்செய்தி எழுதும் வரை வெளியாகவில்லை.

பிரிட்டிஸ் கொலம்பியாவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் கொறோனா தொற்று!

பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஃபிறேசர் சுகாதாரப் பிரிவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுப் பரவைலத் தொடர்ந்து, அப்பள்ளிக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது. குறித்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதிப் படுத்தப்பட்டதைத்  தொடர்ந்து சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பள்ளிக்கூடம் மூடப்பட்டது. எனினும் மாணவர்கள் எவருக்கும் தொற்றுப் பரவல் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் முதலாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் பள்ளிக்கூடங்கள் மீளத் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் ஓர் துரதிஸ்டவசமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவில் கோவிட்-19 தொற்று ஆறாவது நாளாக வீழ்ச்சி!

ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று தொடர்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 27,225 பரிசோதனைகளில் 178 புதிய தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 இறப்புகளும் பதிவாகின. தொடர்ச்சியாக ஆறாவது நாளாக தொற்று எண்ணிக்கை 200க்கும் கீழ் இருந்து வருகின்றது. இன்றைய எண்ணிக்கை நேற்றைய நாளை விட சற்று அதிகமாகும். கடந்த ஐந்து நாள் சராசரி எண்ணிக்கை 181 ஆகும். மாகாண அளவில் தற்போது 2,281 நோயாளிகள் கோவிட் 19 தொற்று தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்றாரியோவில் இதுவரை 33,095 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 85.4 சதவீதமான 28,250 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் தொற்றுக் காரணமாக மொத்தம் 2605 பேர் மரணித்தும் உள்ளனர். இன்று ரொறண்டோ மற்றும் பீல் பிராந்தியம் தவிர்ந்த ரொறண்டோ பெரும்பாகத்தின் யோர்க் உள்ளிட்ட ஏனைய எழு பகுதிகளில் இரண்டாம் கட்டமான மாகாண அரசின் தளர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19: ஒரு இலட்சத்தைக் கடந்த கனடா!

கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து நூற்று நாற்பத்தாறாக(100,146) ஆக பதிவாகியது. இவர்களில் 62,442 பேர் குணமடைந்துள்ளதுடன், 8348 பேர் மரணித்தும் உள்ளனர். கனடாவில் கோவிட்-19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட குபெக்கில் இன்று பதிவான 120 தொற்றுக்களுடன் மொத்தமாக 54383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிந்திய 42 இழப்புக்களுடன் 5340 பேர் மரணித்துள்ளனர். ஒன்ராறியோவில் தொடர்ந்து கோவிட் 19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுப் பரவல் வீழ்ச்சியடைந்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் நாளாந்த தொற்று எண்ணிக்கையளவு குறைந்து வருகின்றது. நேற்றைய தினம் ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 25,278 பரிசோதனைகளில், 173 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் 19 காரணமான 3 இறப்புகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஐந்து நாள் சராசரித் தொற்று எண்ணிக்கை 185 ஆக உள்ளது. அதேவேளை நாளாந்தம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. நாளாந்தம் சராசரியாக 220 பேர் குணமடைகின்றனர். தற்சமயம் தொற்றால் பாத...

மூன்று கிலோ தங்கத்தை தொலைத்தவர் உரிமை கோர அழைப்பு!

சுவிற்சர்லாந்திலுள்ள பயணிகள் தொடரூந்;தில் மூன்று கிலோ தங்க பிஸ்கட்டுக்கள் அடங்கிய பொதி ஒன்று கண்டு பிடிக்கப்பட்;டது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் St. Gallen இல் இருந்து Lucerne க்கு சென்ற பயணிகள் பேரூந்தில் இவ்வாறு தவறவிடப்பட்டதாக சந்தேகிகப்படும் இப்பொதி, கடமையில் இருந்த அப்பேரூந்துப் பணியாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்து அறுபதினாயிரம்(260,000) டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், ஐந்து வருட காலப்பகுதியுள்ள இந்த விலையுயர்ந்த பொதியை தவறவிட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.

ஒன்றாரியோவில் 197 புதிய தொற்றுக்கள்!

ஒன்றாரியோவில் புதிதாக 197 கோவிட் -19 கொறோனா நுண்மித் தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 23,278 சோதனைகளில் இருந்து இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 7 நாட்களாக நாளாந்த தொற்றுக்கள் சீரான வீழ்ச்சியை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிந்திய தொற்றுக்களுடன் ஒன்றாரியோவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,189 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 83.8 சதவீதமான 26,961 பேர் குணமடைந்துள்ளனர். பிந்தியதாக பதிவான 12 இழப்புக்களுடன் 2519 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஒன்றாரியோவில் 266 தொற்றுக்கள்!

ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 266 பேர் கோவிட் 19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது. இது வியாழக்கிழமை பதிவான 182 தொற்றுக்களில் இருந்து 0.8 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது. எனினும் கடந்த ஆறு நாட்களாக நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கை மூன்னூறுக்குக் கீழாக பதிவாகிவருகின்றன. இத்துடன் ஒன்றாரியோவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,992 ஆக காணப்படுகின்றது. இவர்களில் 83 சதவீதமான 26,538 பேர் குணமடைந்தும் உள்ளனர். நேற்றைய தினம் பதிவான 9 இழப்புக்களுடன் மொத்தமாக 2507 பேர் ஒன்றாரியோவில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் 27,456 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவில் புதிய தொற்று எண்ணிக்கை 182

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றின் தாக்கம் வெகுவாக குறைவடைந்தது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை 182 ஆக காணப்படுகின்றது. இவ்வாறு நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து விழ்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கின்றது என்று நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்ட இந்தத் தொற்று எண்ணிக்கை, மார்ச் 28ம் நாளுக்கு பின்னரான ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும். கடந்;த வாரத்தின் 5 நாள் சராசரியாக நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கை 222 ஆக காணப்பட்டது. நேற்று வியாழக்கிழமை ஒன்றாரியோவில் 28,335 தனிநபர் சோதனைகளை நடத்திய பின்னரே இந்த புதிய எண்ணிக்கை பற்றிய முடிவுகள் வெளியாயின. தொற்று எண்ணிக்கையில் ஏற்பட்டுவரும் தொடர் வீழ்ச்சி சாதகமான கூழலை நோக்கி நாம் செல்கின்றோம் என்பதைத் தெரிவிக்கின்றது என்று நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். நேற்று இத்தொற்றால் 11 பேர் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கான நாளாந்த சராசரி இறப்பு 14 ஆகும். மருத்துவமனைகளல் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு மா...

ஸ்லோவாக்கியா பள்ளியில் கத்திக்குத்து – உப அதிபர் மரணம்!

ஸ்லோவாக்கியாவின்(Slovakia) வடக்கே பள்ளிக்கூடம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உப-அதிபர் உயிரிழந்தார். ஸ்லோவாக்கியாவின் Vrutky நகரில் அமைந்துள்ள குறித்த பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவனான 22 வயதான நபரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாவும், அவர் காவற்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. பள்ளிக்கூடத்தின் கண்ணாடியாலான கதவை உடைத்துக் கொண்டு உட்சென்ற நபரை, துணை அதிபர் இடைமறித்த வேளை அவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வகுப்பறை ஒன்றினுள் சென்ற அவரை இடைமறித்த பெண் ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் உப-அதிபர் உயிரிழந்தார். பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கூடப் பணியாளர் ஒருவர் அத்துடன் இரண்டு மாணவர்கள் ஆகியோர் காயமடைந்தனர். அங்கு சென்ற காவற்துறையினர் அவரை கைது செய்ய முற்பட்ட வேளையில், காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வேளையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் போது இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்களும் காயமடைந்தனர்.

விதி மீறினாரா சுகாதார அமைச்சர் எலியட்?

Pic Credit: CP24 ஒன்றாரியோ சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட், கோவிட்-19 பரிசோதனை முடிவு அறிவதற்கு முன்னர் மதுபானம் கொள்வனவு செய்ய சென்றமை குறித்து விமர்சனம் வெளியாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், சுகாதார அமைச்சர் எலியட் ஆகியோர் நேற்று புதன்கிழமை கொறோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அவரது பரிசோதனைக்கான நேர ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு முன்னதாக Dupont Street & Spadina Avenue க்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில்(LCBO) கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது. முன்னதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஸ்ரிஃபன் லெச்சே மேற்கொண்டிருந்த கோவிட்-19 பரிசோதனை முடிவு, நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்ட எலியட், மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக நடந்து கொண்டதாக இன்று செய்தியாளரி;ன் கேள்விக்கு அளித்த பதி...

ஒன்றாரியோவில் கோவிட் 19 தொற்று தொடர் வீழ்ச்சி - இன்று 203

ஒன்றாரியோவில் கோவிட் 19 தொற்று தொடர் வீழ்ச்சி  ஒன்ராறியோவில் இன்று 203 புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 28ம் திகதிக்குப் பின்னரான மிகக் குறைந்த நாளாந்த எண்ணிக்கையாகும். அத்துடன் 12 புதிய இறப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய நாள் மட்டும் 500 கோவிட் 19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது இன்றைய நாளாந்த எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும்.  இந்த வாரத்தில் நாளாந்த எண்ணிக்கை 300 க்குக் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இப்போது ஒன்றாரியோ மாகாணத்தில்  இதுவரை 31,544 பேர் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,885 நோயாளிகள் முற்றிலும் குணமடைந்துள்ளனர். இதுவரை 2,487 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகளில் 11 பேர் 20-39 வயதுடையவர்களாகவும் 94 பேர் 40 முதல் 59 வயதுடையவர்களாகவும், 657 பேர் 60 முதல் 79 வயதுடையவர்களாகவும் 1,725 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர்.  இன்று வெளியாள எண்ணிக்கையில் ரொரண்ரோ, பீல் பிராந்தியங்களில் மட்டும் 131 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று வெளியான எண்ணிக்கையில் 34 சதவீதமானோர் 40-59 வயதுதுக்குட்பட...

ஒன்ராறியோவில் கோவிட் 19 தொடர் வீழ்ச்சி - அமைச்சர் மகிழ்ச்சி

ஒன்ராறியோவில் கோவிட் 19  தொடர் வீழ்ச்சி  ஒன்ராறியோவில் இன்று 230 புதிய தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் 19 தொற்றால் ஏற்பட்ட 14 புதிய இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மார்ச் மாத இறுதிக்குப் பின் குறைந்தளவான தொற்றுகள் ஏற்பட்டுவருவதை காணக்கூடியதாகவுள்ளது என மருத்தவத்துறை தெரிவித்துள்ளது.  ஒன்ராறியோவில் இப்போது மொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,090 ஆகும். இதில் 24,829 முற்றிலும் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2,464 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில்  கடந்த 24 மணிநேரத்தில் 337 முற்றிலும் குணமடைந்துள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தொற்றுப் பரவல் குறைந்துவருதையிட்டு மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் மனநிறைவு அடைவதற்காக தூரம் அதிகமுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  104 இறப்புகளைத் தவிர ஏனைய இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டையாக இருந்தன. அதில் 1,715 இறப்புகள் 80 வயதுக்கு மேற்பட்டவையாக இருந்தன.  இப்போது தொற்றுக் காரணமாக 600 ...

இருநூற்றுக்கும் குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில்!

ஒன்றாரியோவில் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 415 புதிய கோவிட்-19 தொற்றுக்கள் பதிவாகியது. கடந்த 24 மணி நேரத்தில் 192 புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆய்வுகூடத்தில் பிந்திய நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட 223 தொற்றுக்களுடன் மொத்த எண்ணிக்கை 415 ஆக வெளியாகியுள்ளது. இத்துடன் ஒன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,617 ஆக உயர்வடைந்தது. நேற்றைய தினம் பதிவான 19 இழப்புக்களுடன் 2426 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது. கோவிட்-19 தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளோரில் இதுவரை 24,252 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிர்காப்பின் உதவியுடன் 92 பேரும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 117 பேரும் என்று மொத்தமாக 635 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் 19,374 பரிசோதனைகள் ஒன்றாரியோ ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புறோகிரசிவ் கொன்சவேடிவ் கட்சி முன்னிலை!

கம்பெயின் றிசேச்சால்(Campaign Research ) அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் ஒன்றாரியோ மாகாணத்தில் 44 சதவீத ஆதரவுடன் முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான புறோகிறசிவ் கொன்சவேடிவ் கட்சி உள்ளது. மாகாணா லிபரல் கட்சி 27 சதவீத ஆதரவுடன் இரண்டாம் நிலையிலும், மாகாண என்டீபி கட்சி 22 சதவீத ஆதரவுடன் மூன்றாம் நிலையிலும் காணப்படுகின்றது. எனினும் மாகாண லிபரல் கட்சிக்கான மக்கள் ஆதரவு நிலை ஏழு சதவீதத்தாலும், புறோகிரசிவ் கொன்சவேடிவ் கட்சிக்கான ஆதரவு மூன்று சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. அன்றீயா ஹோர்வாத் தலைமையிலான மாகாண எதிர்கட்சியான என்டீபி கட்சிக்கான மக்கள் ஆதரவு நிலை 12 சதவீத சரிவு நிலையை கண்டுள்ளது.

அவசரகால நிலையை மீண்டும் நீடித்த ஒன்றாரியோ!

ஒன்றாரியோ அரசு அவசரகால நடவடிக்கைகளை ஜூன் 19ம் நாள் வரை நீடித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் ஜூன் 9ம் நாளோடு காலவதியாகும் நிலையில், இது ஜூன் 30 வரை நீடிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும் அரசு 10 நாட்களுக்கு மட்டும் அவசரகாலச் செயற்பாடுகளை நீடித்துள்ளது. கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட அவசரகால உத்தரவுகளுக்கு அமைய உள்ளக உணவகங்கள், பேரங்காடிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் முடி திருத்தகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதுடன் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடுவதுவும் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த அவசரகால உத்தரவுகள் தொடர்ந்து பேணுவது மிகவும் முக்கியமானதாக உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்வை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் மீள கொண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார். எதுவாயினும் தொற்றுநோய்ப் பரவல் தொடர்பான தகவல்களை அடிப்படையாக் கொண்டே முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை முதற்படிநிலை அமுல்ப்படுத்தப்பட்டு பலவாரங்கள் கடந்துள்ள நில...

முப்பதினாயிரம் தொற்றுக்களைக் கடந்த ஒன்றாரியோ!

ஒன்றாரியோவில் இன்று 455 கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்ட 387 தொற்றுக்களும் ஆய்வுகூடத்தில் பிந்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட 68 பதிவுகளுடன் சேர்ந்து 455 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன. கடந்த இரண்டு வாரத்தில் பதிவாகிய அதிகூடிய தொற்றாக இது காணப்படுகின்றது. இதேவேளை, கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,202 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 23,947 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் பதிவான 35 இழப்புக்களுடன் கொறோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2434 ஆக உயர்வடைந்தது. நேற்றைய தினம் 23,105 பரிசோதனைகள் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே ஒரு நாளில் ஒன்றாரியோவில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனைகளாக காணப்படுகிறது.

ஒன்ராறியாவில் புதிய தொற்று எண்ணிக்கை 344 - இறப்பு 15

ஒன்ராறியாவில் புதிய தொற்று எண்ணிக்கை 344 - இறப்பு 15  ஒன்ராறியோவில் 344 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ள அதேவேளையில் 15 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஏழு நாட்களின் சராசரி நாளாந்த அதிகரிப்பு 360 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்ராறியோவில் இப்போது 3,792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 29,747 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்  23,583 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை இறந்தவர்களில் 103 பேரைத்  தவிர ஏனையோர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆவர்.  அவர்களில் 1,646 பேர் 80 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் நீண்டகால பராமரிப்பு அல்லது ஓய்வூதிய இல்லங்களில் வசித்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்ராறியோவில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ரொரண்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 749 பேர் மருத்துவமனையில் அனுமதிக்...

ஒன்றாரியோவில் இருபதினாயிரத்துக்கும் அதிகமான கோவிட்-19 பரிசோதனை!

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக் குறித்து நேற்று 20,822 பரிசோதனைகள் ஒன்றாரியோவின் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதுவே இம்மாகாணத்தில் நாள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனையாக அமைகின்றது. இருபத்தையாயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வல்லமை கொண்ட ஒன்றாரியோவின் ஆய்வகங்களில், கடந்த மே 29ம் நாள் முதன் முதலில் இருபதினாயிரத்தை தாண்டிய 20,640 பரிசோதனை இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 356 கொறோனா தொற்றுக்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்றாரியோவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,403 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 78.9 சதவீதமான 23,208 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் நேற்றைய தினம் பதிவான 45 இழப்புக்களுடன் கோவிட்-19 தொற்றால் ஒன்றாரியோவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2357 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 80 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்தவையாகும். கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3838 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் என்பது...

ஒன்ராறியோவில் தொற்று எண்ணிக்கை 338 ஆக வீழ்ச்சி அடைந்தது.

ஒன்ராறியோவில் தொற்று எண்ணிக்கை 338 ஆக வீழ்ச்சி அடைந்தது. ஒன்ராறியோவில் கடந்த 24 மணிநேரத்தில்  338 புதிய கோவிட்19 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களும் தொற்றுகள் கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று நாளாந்த எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. அதேவேளை நேற்று மட்டும் 19 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்றாரியோவில் இது மொத்தம் 29,047 நோயாளிகள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2312 பேர் இறந்துள்ளனர். 33,811 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர்.  ஓய்வூதிய நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்றாரியோவில் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான இறப்புகள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களிலேயே நிகழ்ந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 791 ஆக குறைந்ததுள்ளது. அவர்களில், 127 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கொறோனா தொற்றுக் குறித்த 17,537 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவில் அதிகரித்துச் செல்லும் கோவிட் 19 பரவல் - இன்று 446

ஒன்றாரியோவி ல் அதிகரித்துச் செல்லும் கோவிட் 19 பரவல் ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை 446 புதிய தொற்றுகள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு இளையவர்கள்உட்பட 19 பேர் நேற்று இறந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது. ஒன்ராறியோவில் இப்போது 3,932 நோயாளிகள் கண்காணிப்பிலும் மருத்துவமனைகளிலும் உள்ளனர். முற்றிலும் குணமடைந்தோர் 22,484 பேர். ஒன்ராறியோவில் இத்தொற்றால் இதுவரை 28,709 பேர் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். திங்கட்கிழமை ஏற்பட்ட அதிகரிப்பில் பெரும்பான்மை தெற்கு ஒன்ராறியோவில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஏற்பட்டிருந்தன. சிம்கோ பகுதியில் உள்ள பண்ணைகளில் 120 பேரும் செயின்ட் கதரீன் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் குறைந்தது 20 பேரும் பாதிக்ப்பட்டுள்ளனர்.  இதுவே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது.  நேற்று இறந்தவர்களில்; இருவர் 20 – 39 வயதிற்குட்டோர் ஆவர். இதுவரை ஒன்ராறியோவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்களில் 10 பேர்  மட்டுமே இறந்துள...

ஒன்றாரியோவில் மீண்டும் அதிகரித்த கொறோனா தொற்று!

கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் அதிகரித்த நிலையை இன்றைய புள்ளி விபரத் தகவல்கள் காட்டுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 404 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இத்துடன் மாகாணத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 28,263 ஆக அதிகரித்துள்ளது. பிந்திய 10 இழப்புக்களுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2329 ஆக உயர்வடைந்தது. உயிரிழந்தோரில் 79 சதவீதமானவர்கள் நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் தொற்றுக்குள்ளானோர் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தொற்றுக்குள்ளானோரில் 78.4 சதவீதமான 22,153 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்றும், 3,834 பேர் கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை பெற்றும் வருகின்றனர். ஒன்றாரியோவில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருப்பினும் நேற்றைய தினம் 14,379 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்வது என்ற இலக்கையும் எட்டவில்லை.