ஒன்றாரியோ மாகாணத்தில் முதன் முதலாக இருபதினாயிரத்தும் மேற்பட்ட நாளார்ந்த கொறோனா தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக் குறி;த்து இருபதாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்றாரியோவில், நாளார்ந்தம் பதினாறாயிரம் பரிசோதனைகள் என்ற இலக்கு அனேக நாட்களில் எட்டப்படுவதில்லை. இந்நிலையில் 20,640 பரிசோதனைகள் என்ற இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்காத எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே 8ம் நாள் மேற்கொள்ளப்பட்ட 19,834 பரிசோதனைகள் இதுவரை கூடுதலான பரிசோதனையான இருந்து வந்தது. இதேவேளை ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 323 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். இத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,533 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 77.6 சதவீதமான 21,353 பேர் குணமடைந்துள்ளனர். பிந்திய 17 இழப்புக்களுடன் இதுவரை 2309 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளுர் நேரப்படி இன்று மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியல், கனடாவில் 90,166 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 7073 பேர் உயிரிழந...