Skip to main content

Posts

Showing posts from October, 2020

ஒன்ராறியோவில் அதிகூடிய நாளார்ந்த கொரோனா தொற்று!

ஒன்ராறியோவில் அதிகூடிய நாளார்ந்த கோவிட்-19 நுண்மித் தொற்றாக இன்று 978 புதிய தொற்றுக்களும், ஒன்பது இழப்புக்களும் பதிவாகியுள்ளது. மாகாண ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 44,151 பரிசோதனைகளில் இருந்து இந்த புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஒக்ரோபர் 09ம் நாள் பதிவான 939 பெருந்தொற்றுக்களுக்கு மேலாக இன்றைய எண்ணிக்கை காணப்படுகிறது. இன்றைய தொற்றுக்களில் 348 ரொறன்ரோவிலும், 170 பீல்ப் பிராந்தியத்திலும், 141 யோர்க்கிலும், 89 ஒடாவாவிலும், 51 டுர்றம் பிராந்தியத்திலும் உள்ளடங்குகின்றன. இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,331 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85.7 சதவீதமான 59,424 பேர் குணமடைந்துள்ளதுடன், 3086 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

எல்.ரீ.ரீ மீதான தடையை பிரித்தானியா நீக்கக்கூடாது– ஸ்ரீலங்கா கோரிக்கை

  2001 ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பிரித்தானிய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு மறுத்த பிரித்தானிய அரசின் செயல் தவாறனது என்று பிரித்தானியாவின்  Proscribed Organizations Appeal Commission  எனப்படும் அந்நாட்டின் நீதித்துறை ஆணையம் ஒன்று நேற்று அறிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அலுவலகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசு முன்வைத்த கோரிக்கையை, 2019 ஆம் மார்ச் 08ம் நாள் பிரித்தானிய அரசு நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து உள்துறை அலுவலகத்தின் இந்த முடிவுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு, பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தார்கள். விசாரணையை மேற்கொண்ட ஆணையம் பிரித்தானிய உள்துறைச் செயலாளரின் செயல் குறைபாடுடையதென நேற்று ஒக்டோபர் 21ம் நாள் வெளியிட்ட 38 பக்க தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆணையகத்தின் தீர்ப்புத் தொடர்பில் பதில் அளிக்க பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு 28 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அலுவலகம்...

இரண்டாம் உலகமகாயுத்த கால வெடிகருவி எட்டோபிக்கோவில் மீட்பு!

  1939 செப்ரெம்பர் 01ம் நாள்  தொடக்கம் 1945 செப்ரெம்பர் 02ம் நாள் வரையான ஆறு ஆண்டுகாலமானது இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியாக கருதப்படுகிறது. இக்காலப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருள் அல்லது கருவி ஒன்று நேற்றிரவு ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள எட்டோபிக்கோவின்(Etobicoke)  Dunning Cresent & Westhead Road  பகுதியில் உள்ள வீட்டு வளாகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. காவற்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அயலில் உள்ள ஆறு வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த ரொறன்ரோ காவற்துறையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மேற்கொண்ட நடவடிக்கையில் அது செயற்திறன் அற்றதென உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக அக்கற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் புலனாய்வுத் துறை விசாரணை!

  இலங்கையின் மூத்த குடிமக்கள் தமிழர்களே என்று தெரிவித்தமை தொடர்பில் வடமாகாண சபையின் முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் புலனாய்வுத்துறை விசாரணை இடம் பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கைப் புலனாய்வுப் துறைக் குழுவொன்று, நல்லூரில் உள்ள விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் வைத்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இது தொடர்பில் பௌத்த துறவி ஒருவர் மேற்கொண்ட காவற்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று விசாரணை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளின் தமிழ் மொழியும் ஒன்றாகும். அத்துடன் இலங்கையின் முதல் பூர்வீக குடிமக்களின் மொழி தமிழ் மொழி என்றும் சுட்டிக்காட்டியிருந்த விக்னேஸ்வரன், அந்த மொழியில் எனது முதல் நாடாளுமன்ற உரையயை ஆரம்பிக்கிறேன் என்று, கடந்த ஓகஸ்ட் 20ம் நாள் இலங்கை நாடாளுமன்றில் ...