Skip to main content

Posts

Showing posts from April, 2020

வூஹான் ஆய்வுகூடத்தில் கோவிட்-19 உருவாக்கம் - ட்றம்ப் குற்றச்சாட்டு

கோவிட்-19 கொறோனா நுண்மியானது சீனாவின் குபே மாகாணத்தின் வூஹானில் உள்ள நுண்மித் தொடர்பான ஆய்வு கூடமான The Wuhan Institute of Virology இல் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்றம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவைக் கடந்த அனைத்துலக ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொறோனா நுண்மித் தொற்றை, சீனாவால் நிறுத்த முடியவில்லை அல்லது தொடர்ந்து பரவட்டும் என்றே விட்டுள்ளது என, இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார். எனினும் சீனா மீதான அவரது குற்றச்சாட்டு தொடர்பில் இருக்கக் கூடிய ஆதாரம் குறித்து, ட்றம்ப் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்வரும் நொவெம்பரி;ல் நடைபெறவுள்ள அமெரிக்க குடியரசுத் தேர்தலில் தன்னை தோற்கடிக்க, சீனா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் ட்றம்ப், குற்றம் சுமத்தினார். இந்நிலையில், சீனாவின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது மேலும் வரி அதிகரிப்பை மேற்கொள்ளப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் இந்த விடயம் தொடர்பில் தான் பல்வேறு நடவட...

யாழில் மற்றுமொரு பெண்ணுக்கு கொறோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் சுகவீனமுற்ற நிலையில் இன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இவரது சகோதரனுக்கு கொறோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இப்பெண்மணி கடந்த ஏப்ரல் 11ம் நாள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீலங்காவில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஏழு பேர் மரணித்துள்ளதுடன் 154 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவ்வாறே நேற்றைய தினமும் 53 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று அடையாளம் காணப்பட்டது.

விபத்துக்குள்ளான கனடிய உலங்குவானூர்தியில் இருந்து ஒரு அதிகாரியின் உடலம் மீட்பு!

மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கனடிய உலங்குவானூர்தியில் இருந்து முதலாவது கனடியப் படைத்துறையைச் சேர்ந்த துணை லெப்டினன் தர பெண் அதிகாரி Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்தியதரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் நடவடிக்கை ஒன்றில் கிறேக்கத்திற்கும், இத்தாலிக்கும் இடையில் HMCS Fredericton என்ற கனேடிய கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து இயங்கிய வான்படையின் புதிய CH-148 Cyclone ரக உலங்குவானூர்தியின் தொடர்பு  நேற்றிரவு துண்டிக்கப்பட்ட நிலையில், இது காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் குறித்த வானூர்தி கடலில் வீழ்ந்து நொருங்கியதாகவும், அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இணைந்து தேடுதலை மேற்கொண்ட கனேடிய, இத்தாலிய, துருக்கிய கடற்படைக் கப்பல்கள் ஒரு உடலத்தை மீட்டுள்ளதுடன், அது Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் என்று அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Pic from FB Sub-Lt. Abbigail Cowbrough இந்நிலையில் தொடர்ந்தும் ஏனைய உடலங்களையும் மீட்கும் நடவடிக்கை தொட...

ஒன்றாரியோவில் இன்று 89 பேர் இறப்பு - எண்ணிக்கையிலும் உயர்வு

ஒன்றாரியோவில் ஒரே நாளில் 89 பேர் இறப்பு -  எண்ணிக்கையிலும் உயர்வு ஒன்ராறியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் கோவிட் 19 தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர். இதுவே ஒரு நாளில் நிகழ்ந்த அதிகூடிய இறப்பு எண்ணிக்கையாகும். இத்தோடு மொத்தமாக 1082 இறப்புகளை மாகாணம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 459 என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய எண்ணிக்கைனயை விட இது அதிகரித்திருக்கின்றது. எனினும் தொற்றின் அதிகரிப்பு வேகம் உச்சநிலையில் இருந்து குறைவடைந்து செல்வதை புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன. இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்ட போதும் தொடர் எண்ணிக்கை அதிகரிப்பில் வீழ்ச்சிப் போக்கினை அவதானிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 6 நாட்கள் 500 க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது. ஆறு வாரங்களுக்குக் பின் நோய்த்தொற்றின் உச்சப் பாதிப்பைக் கடந்துவிட்தாக ஒன்றாரியோ அரசு தெரிவித்திருக்கின்றது. நாளொன்றுக்கு 14 ஆயிரம் சோதனைகளை நடத்துவதற்கு அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. புதன்கிழமை இது 12,928 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "நாம் நோய...

கோவிட்-19 ஸ்ரீலங்கா: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு!

ஸ்ரீலங்காவில் காவற்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் இன்று வியாழக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை, மீண்டும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருகிறது. கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் காலை 5 மணிமுதல் இரவு எட்டு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. எனினும் நாளை வெள்ளிகிழமை மே 01ம் நாள் தொழிலாளர் தின ஒன்று கூடல்களை தடுக்கும் வண்ணம் அமுலுக்கு கொண்டு வரப்படும் காவற்துறை ஊரடங்குச்சட்டம், திங்கட்கிழமை வரை நீடிக்கின்றது. ஸ்ரீலங்காவில் இதுவரை 649 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்களில் ஏழு பேர் மரணித்தும் உள்ளனர். இதேவேளை, கடற்படையினர் 226 பேருக்குக் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் வெலிசறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படையினரெனவும், இதையடுத்து அந்தக் ...

பொலிவூட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்.

பொலிவூட் திரையுலகின் மூத்த பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 67 ஆகும். கடந்த 2018ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நியூயோர்க்கில் சிகிச்சை பெற்று கடந்த செப்ரெம்பர் இறுதியில் இந்தியா திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், முப்பை H N Reliance  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 30ம் நாள் வியாழக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1970ம் ஆண்டுகளில் அவரது தந்தை ராஜ் கபூருடன் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருந்த ரிஷிகபூர், 1973இல் பொபி திரைப்படத்தில் பதின்ம வயது இளைஞனாக தோன்றி நடித்தமை பெரும் வெற்றியைக் கொடுத்தது. தொடர்ந்து 1980, 1990 களில் நடித்த Khel Khel Mein, Karz ,Chandni போன்ற திரைப்படங்கள் பெரு வெற்றியை தேடிக் கொடுத்தது. பொலிவூட் நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரன்பீர் கபூர்(பொலிவூட் நடிகர்) என்ற மகனும், ரிதிமா கபூர் என்ற மகளும் உள்ளனர். மறைந்த...

கோவிட்-19 கனடா: மருத்துவமனைகளில் கொறோனா தொற்று அபாயம் இல்லை.

கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,393 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2905 ஆக காணப்படுகின்றது. எனினும் தொற்றுக்குள்ளாவோரின் வேகம் குறைவடைந்து செல்வதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் தெரிவித்தார். இதேவேளை கொறோனா நுண்மித் தொற்று அச்சம் காரணமாக உயிராபத்தான மாரடைப்பு போன்ற நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போதும், பாதிக்கப்படுவோர் மருத்துவமனைக்கு செல்ல அச்சுகின்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையில், மருத்துவமனைகளில் கொறோனா நுண்மித் தொற்று அபாயம் இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்படும் நிலையில், முறைப்படியாக பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பல்வேறு படிமங்களில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நோர்த் யோர்க் பொது மருத்துவமனையிலும், ரொறண்டோ சிக் கிட்ஸ்  மருத்துவமனையிலும் கொறோனா தொற்றுப் பரவல் ஏற்படட போதிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிக் கிட்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்து...

தடுப்பூசி இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம்

தடுப்பூசி இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் - ஜப்பானிய மருத்து சங்கம் கோவிட்-19 தொற்று நோய்க்குப் பொருத்தமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்காத நிலையில் ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் மருத்துவ சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாடுகளில் யாவற்றிலும் கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இந்த போட்டிகளை நடத்த முடியும் என அது மேலும் தெரிவித்துள்ளது.  பொருத்தமான தடுப்பூசி ஒன்று இல்லாமல் இந்த போட்டிகளை நடத்துவது எளிதாக இருக்கப் போவதில்லை என மருத்துவர் ஜோஸ்ராகே யோகோகுரா(Yoshitake Yokokura) கூறியுள்ளார். ஜப்பானில் இதுவரை 13 ஆயிரத்து 576 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அங்கு துறைமுகம் ஒன்றில் நிற்கும் ஒரு கப்பலில் மட்டும் 712 நோயாளிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை 389 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் நாடெங்கிலும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளது. இவ்வாண்டு நடைபெறவிருந்த ரோக்கியோ...

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை வீழ்ச்சி!

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை பெரு வீழ்ச்சி!  கடந்த 24 மணிநேரத்தில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 347 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரத்தின் பின் ஏற்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையாக இது நோக்கப்படுகின்றது. அதேவேளை 45 இறப்புகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 24 அன்று, அதிக உயர்வாக 640 காணப்பட்டது. பின்னர் குறைவடைந்து நேற்று 525 ஆக உயர்ந்திருந்தது. எனினும் இன்றைய வீழ்ச்சி மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கின்றது. ஒன்ராறியோ கோவிட் 19 என்ற கிருமித் தொற்றின் உச்சத்தில் இருந்து இறங்கத் தொடங்கியுள்ளது என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடந்து இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை "சீரான" வீழ்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகே தொற்றுர் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, வணிக நிறுவனங்களைத் திறப்பது தொடர்பாக சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதன்மையான பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளைத் திறப்பதுடன், தொற்றுத...

கோவிட்-19: உலக இழப்பின் கால்ப்பங்கைக் கடந்தது அமெரிக்கா.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59,266 ஆக பதிவாகியுள்ளது. கொறோனா தொற்றால் அனைத்துலக ரீதியாக முப்பத்தொரு இலட்சத்துப் பதின்மூவாயிரத்தைக்(3,117,880) கடந்துள்ளதுடன் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறாக(217,756) காணப்படுகின்றது. எனினும் அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்துப் பன்னிரெண்டாயிரத்தைக்(1,012,583) கடந்துள்ளது. அங்கு ஐம்பத்தொன்பதினாயிரத்துக்கும்  அதிகமானவர்கள் மரணமானார்கள். வியட்னாம் போர் முழுவதிலும் மரணமான அமெரிக்கர்களை விட அதிகமானோர் அங்கு கொறோனா தொற்றால் மரணமாயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1968ம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் போரில் பதினேழாயிரம்(17,000) அமெரிக்கத் துருப்பினர் மரணித்தனர். ஆனால் கொறோனா தொற்றால் அனைத்துலக ரீதியாக மரணித்துள்ளவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக ஸ்பெய்னில் 232,128 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இவர்களில் 23,822 பேர் மரணித்துள்ளனர். எனினும் அங்கு கொறோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்க...

ஸ்லம்டோக் மில்லியனர் நடிகர் இர்ஃபான் ஹான் காலமானார்.

பொலிவூட், ஹொலிவூட் திரையுலக நடிகர் இர்ஃபான் ஹான்(Irrfan Khan) இன்று தனது 53-வது அகவையில் காலமானார். சிறுநீரக தொற்றுக் காரணமாக நேற்று மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். 2018ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். பொலிவூட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த போதும், அவரின் ஹொலிவூட் பிரவேசம் அவரது கலையுலக வாழ்வில் பெரு வெற்றியாக கருதப்படுகிறது. ஹொலிவூட்டில் அவர் நடித்த, Slumdog Millionaire (2008), The Darjeeling Limited (2007), Life of Pi (2012) and Jurassic World (2015)  ஆகியவை பல விருதுகளை வென்றவையாகும். 1988 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் அவர் 2013 ஆம் ஆண்டில் இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றிருந்தார். இதேவேளை, ஹானின் தாயார் கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 25ம் நாள் தனது 95-வது அகவையில் காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19: ஐம்பதினாயிரத்தைக் கடந்தது கனடா

கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று ஐம்பதினாயிரத்தைக் கடந்துள்ள போதும், தொற்றுக்குள்ளாவோரின் வேகம் குறைவடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்கிழமை(ஏப்ரல் 29) இரவு வரை கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,026 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2,859 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 19231 பேர் குணமடைந்துள்ளனர். கனடாவில் ஏற்பட்டுள்ள தொற்றில் 80 சதவீதமானது குபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் ஏற்பட்ட தொற்றாகும். இவற்றில் 79 சதவீதமானவை நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளவை. குபெக்கில் 25757 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மரணமானவர்களின் எண்ணிக்கை 1682 ஆக அதிகரித்துள்ளது. ஒன்றாரியோவில் கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய 525 தொற்றுக்களுடன் 15,381 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் இன்றைய 59 இழப்புக்களுடன் மரணமானோரின் எண்ணிக்கை 951 ஆகவும் அதிகரித்துள்ளன. அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் முறையே 4850 உம் 2053 என்ற எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன், இவ...

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

இன்று தொற்று எண்ணிக்கை 525 கடந்த மூன்று நாட்களாகக் குறைவடைந்து சென்ற நாளாந்த தொற்று எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. இன்று இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை 437 தொற்றுகள் பதிவாகியிருந்ததை குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அதிக உயர்வாக 640 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருந்தன. கடந்த 3 நாட்களாக எண்ணிக்கை குறைவடைந்து சென்றமை, நோயின் தாக்கம் குறைவடைகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நேற்றையை விட, 88 புதிய தொற்றுகளால் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிக இறப்புகள் அறிவிக்கப்பட்ட நாள் இன்றே.   தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சீராக இருப்பதாகத் தெரிகிறது.   ஐ.சி.யூ யூனிட்களில் கோவிட் -19 உடன் 239 பேர் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன, நேற்று இது 241 ஆக இருந்தது. ஏப்ரல் 9 ஆம் திகதி அதிக உயர்வாக 264 அனுமதிக்கப்பட்டிருந்தனர். இத்த...

கோவிட் -19 கனடா: கொறோனா தொற்றும் பொருளாதார செயற்பாடுகளும்.

கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 48500 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 2707 பேர் மரணித்துள்ளதுடன், 18281 பேர் குணமடைந்துள்னர். குபெக் மாகாணத்தில் கொறோனா நுண்மித் தொற்றுக்கள் 24982 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 1599 பேர் மரணித்துள்ளதுடன், 5517 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தாக, ஒன்றாரியோவில் இன்று(ஏப்ரல் 27) புதிதாக 424 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14856 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 892 மரணத்துள்ளதுடன், 8526 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தாக அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணங்களில் முறையே 4696, 1998 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முiறேய 75, 103 ஆக காணப்படுகிறது. இதேவேளை ஒன்றாரியோ மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான மூன்று கட்டத் திட்டத்தை முதல்வர் டக் ஃபோர்ட் இன்று வெளியிட்டார். இரண்டு தொடக்கம் நான்கு வார காலப்பகுதியில் நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்த பின்னர் முதற் கட்ட...

15ம் ஆண்டில் நினைவு கூரப்படும் ஊடகவியலாளர் தராக்கி சிவராம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் என்று அறியப்பட்ட மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 15-வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தால் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் ஊடகத்தினரும், மனித நேயச் செயற்பாட்டாளர்களும் முடக்கம் அடைந்துள்ள நிலையில், மாமனிதர் தராக்கி சிவராம் அமைதியாக நினைவு கூரப்படுகிறார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில், கொழும்பு பம்பலப்பிட்டி காவற்துறை நிலையத்துக்கு முன்பாக வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உடல், மறுநாள் காலை ஸ்ரீலங்காவின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக நடாளுமன்றின் பின்புறமாகவுள்ள வீதியோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. உடலில் பலத்த இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட அவரது உடலை, சக ஊடகவியலாளர்களும், அவரது குடும்பத்தினரும் அடையாளம் காண்பித்தனர். இப்படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 1959ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் நாள் மட்டக்களப்பில் பிறந்த தர்மரெட்ணம் சிவராம், பின்னர் ஊட...

கிழக்கு இலண்டனில் கொடூரம், இரண்டு குழந்தைகள் பலி.

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நேற்று இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்றில் தமிழ்க் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த அகவை ஒன்று பெண் குழந்தை ஒன்று, அகவை மூன்று சிறுவன் ஒருவனும் உயிரிழந்தனர். கிழக்கு இலண்டனின் இல்ஃபோர்ட்டில்( Ilford ) வசித்துவரும் 40 அகவையுடைய நிதின்குமார் (Nithin Kumar) என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் பிரித்தானிய நேரம் மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கூரான ஆயுதம் ஒன்றால் இரண்டு குழந்தைகளும் தாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவ இடத்திலேயே அகவை ஒன்றையுடைய பெண் குழந்தை உயிரிழந்ததுடன், அகவை மூன்றையுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெற்றோ பொலிட்டன்(Metropolitan Police) காவற்துறையினர் தெரிவித்தனர். உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குடும்பத்தர், தற்சமயம் ஆபத்தான நிலையைக் கடந்துள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மெற்றோ பொலிட்டன் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவிட்-19 குபெக்: தொடக்கநிலைப் பள்ளிக்கூடங்கள் திறப்பு, பண்ணை நடவடிக்கைகள் ஆரம்பம்

குபெக்கில் தொடக்கநிலைப் பள்ளிக்கூடங்களும், குழந்தைகள் மற்றும் சிறார் பராமரிப்பு நிலையங்களும் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கம் காரணமாக மார்ச் இரண்டாம் வாரத்துடன் அவசரகால நிலைப் பிரகடண அறிவிப்புக்கு அமைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பள்ளிக்கூடங்கள் உட்பட்ட அனைத்தும் மூடப்பட்டன. நுண்மித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கனடிய மாகாணங்களில் குபெக் முன்னிலை வகிக்கின்றது. இன்று வரை சுமார் 24982 பேர் தொற்றுக்குள்ளாகியதுடன், இவர்களில் 1599 மரணித்துள்ளதுடன் 5517 குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாகாண முதல்வர் ஃபிரான்ஸ்சுவா லெகோல்(Francois Legault), மே 11ம் நாள் முதல் மொன்றியல் தவிர்ந்த ஏனைய நகரங்களில் மூடப்பட்டுள்ள தொடக்க நிலைப் பள்ளிக்கூடங்களும், சிறார் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் யாவும் திறக்கப்படும் என்று கூறினார். மே 19ம் நாள் மொன்றியலிலும் திறக்கப்படுகின்றன. எனினும் கோவிட்-19 நுண்மித் தொற்று குறிப்பிடும் படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் மாத்திரம் இது சாத்தியப்படும் என்றும் அவர...

பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் இழப்பீட்டை வழங்குமாறு ஒஸ்திரேலிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஓஸ்திரேலியாவில் ஏதிலித் தஞ்சம் கோரியுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் டொலர் இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒஸ்திரேலியாவில் தமது ஏதிலிக் கோரிக்கைக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக போராடும் நடேஸ் எனப்படும் நடேசலிங்கம் முருகப்பன், அவரது மனைவி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகள் விடயத்தில் நம்பிக்கை கொடுக்கும் ஓர் தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 17) வழங்கியது. போர் காரணமாக ஒஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற நடேஸ், பிரியா திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு நான்கு மற்றும் இரண்டு வயதி;;ல் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மத்திய குயிஸ்லாந்தின் பிலோய்லா (Biloela) நகரில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது பாதுகாப்பு வீசா முடிவடைந்த நிலையில், அவர்களது ஏதிலிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஓகஸ்ட் 29 நாள் சிறப்பு விமானம் ஒன்றில் மெல்போனில் இருந்து ஏற்றப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில், இளைய மகள் தருணிகா சார்பில் உச்ச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து நாடுகடத்தும் உத்தரவு தற...

ராஜிவ் காந்தி கொலைவழக்கு கைதி முருகனின் தந்தை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான முருகனின் தந்தை இலங்கை நேரப்படி இன்று திங்கட்கிழமை ஏப்ரல் 27ம் நாள் அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார். 83 அகவையுடைய முருகனின் தந்தை வைரவப்பிள்ளை வெற்றிவேலு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்த செய்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தனது தந்தையுடன் கானொளி தொடர்பாடல் ஊடாக பார்த்து பேச மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில் அவசர மனு அனுப்பியிருந்தார். கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று காரணமாக பிற கைதிகளுக்கு காணொளி தொடர்பாடல் வழியாக  அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், எனவே தனக்கும் அதுபோன்று அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் முருகன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், முருகன் தனது தந்தையை கட...

ஒன்டாரியோ மாகாண பள்ளிக்கூடங்கள் மே-31 வரை மூடப்பட்டிருக்கும்

ஓன்டாரியோ மாகாண அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இயங்கும்பள்ளிக்கூடங்கள் எதிர்வரும் மே 31ம் நாள் வரை மூடப்பட்டிருக்கும் என்று இன்று மாகாண அரசு அறிவித்தது. கடந்த மார்ச் விடுமுறையுடன் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்கைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள், பின்னர் மே 4ம் நாள் வரை நீடிக்கப்பட்டது இந்த நிலையில், தொடர்ந்தும் கோவிட்19 இன் தாக்கம் இருப்பதால், மே 31ம் நாள் வரை மூடுவதாக மாகாண கல்வியமைச்சர் ஸ்ரீஃபன் லெச்சே (Stephen Lecce) இன்று அறிவித்தார். சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவம், தேவைப்பட்டால், இந்தத் காலஎல்லை மேலும் நீடிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக லெச்சே செய்தியாளர்களிடம் கூறினார். இதேவேளை கடந்த ஏப்ரல் 06ம் நாள் முதல் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19: கனடிய நிலவரம்

கோவிட்19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாற்பத்தாறாயிரத்தைக் கடந்தது. கனடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,848 ஆக உயர்வடைந்ததுடன், அவர்களில் 2560 மரணித்துள்ளனர். 17328 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குபெக் மாகாணத்தில் 24107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 1515 பேர் மணித்துள்ளனர். இரண்டாம் நிலையில் உள்ள ஒன்டாரியோவில் இரண்டு வாரங்களின் பின்னர், குறைந்தளவிலான கொறோனாத் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இன்று வெளியாகிய தரவுகளின்படி, ஒன்ராறியோவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 437 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றயதினம் 476 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகிய எண்ணிக்கை அதனை விட குறைவாக அமைந்துள்ளமை சற்று நம்பிக்கையை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 13ம் திகதி 421 பேர் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாகவம், 17 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய எண்ணி...

கோவிட்-19: அனைத்துலக நிலவரம்

அனைத்துலக ரீதியாக கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது இலட்சத்தைக் கடந்துள்ளது. கனடிய நேரம் இன்று காலை ஆறு மணியளவில் Johns Hopkins  பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது இலட்சத்து எட்டாயிரத்து ஐநூற்றி இருபத்தேழாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து முன்னூற்று முப்பத்து மூன்றாக காணப்படுகின்றது. கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஒன்பது இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் பேர் நுண்மித் தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஐம்பத்தினான்காயிரத்து நூற்றி அறுபத்தொரு பேர்(54161) மரணித்துள்ளனர். ஸ்பெயினில் நுண்மித் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 223,759 ஆகவும் மரணமானவர்களின் எண்ணிக்கை 22902 ஆகவும், இத்தாலியில் தொற்றுக்குள்ளானவர்கள் 195351 ஆகவும் மரணமானவர்களின் எண்ணிக்கை 26384 ஆகவும் காணபப்டுகின்றன. பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்கள் 161,644 பேர் என்றும் மரணித்தோர் 22614 ஆகவும், ஜேர்மனியில் முறையே 156,513 பேர் தொற்றுக்குள்ள...