ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 32,106 பரிசோதனைகளில் 148 பேருக்கு கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன. கடந்த ஜூலை 24ம் நாளுக்கு பின்னர் இன்றைய தினம் அதிகரித்த நாளார்ந்த தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,083 ஆக அதிகரித்ததுடன், இவர்களில் 0.4 சதவீதமான 38,126 பேர் குணமடைந்துள்ளதுடன், 2809 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஒன்ராறியோவில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளில் 27 இல் ஐந்து அல்லது அதற்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 18 இல் எவ்வித தொற்றுக்களும் பதிவாகவில்லை என்று மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.