ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 46,671 கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுப் பரிசோதனைகளில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக 1588 நாளார்ந்த தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 21 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தொற்றுக்குறித்த பரிசோதனைகளில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்றுக்களாக இது காணப்படுகின்றது. பீல்ப் பிராந்தியத்தில் 522 பேரும், ரொறன்ரோவில் 450 பேரும், 150 யோர்க் பிராந்தியத்தில் பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றுக்களுள் உள்ளடங்குகின்றனர். பிந்திய நாளார்ந்த தொற்றுக்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,378 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 86,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 3472 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம் முதல் ரொறன்ரோ, பீல்ப் பிராந்தியங்கள் முடக்க நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. ரொறன்ரோ நகரின் கொரோனா நிலைமைகள் பிழையான திசையில் நகர்வதாக தாம் கருதுவதாகவும் ...