இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை முதல்வர் மூத்த சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்று அதிகமாக காணப்படும் சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையிலும், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை,கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை முழுமையாக மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொதுமக்களை வீடுகளிலே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கல்முனை மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் அர்சாத்...
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில். அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் உறுப்பினராக கடந்த டிசம்பர் 08ம் நாளன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று புதன்கிழமை முற்பகல் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சுதாமதி சத்தியப் பிரமாணம் செய்தார். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டார். நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த சுதாமதி அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேசம் முஸ்ல...