Skip to main content

கோவிட் 19 - இன்றைய ஒன்ராறியோ ஏப்ரல் 04.

கோவிட் 19 - இன்றைய ஒன்ராறியோ


இன்று புதிய தொற்று எண்ணிக்கை 375 எனவும் இறப்பு எண்ணிக்கை 27 எனவும் ஒன்ராறியோ நலத்துறை அறிவித்துள்ளது. நேற்றுப் பதிவான 462 என்ற எண்ணிக்யை விட இன்று குறைவடைந்திருப்பது பாதுகாப் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

இதுவரை 1200 பேர் இத்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இத்தொற்றுத் தொடர்பான பரிசோதனையில் 1336 பேர் இருக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 5000க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை ஒன்ராறியோவில் 94 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர்.

இந்த வேகத்தில் தொற்றுப் பரவல் தொடர்ந்தால் ஏப்பிர் மாத இறுதிக்குள் ஒன்ராறியோ மாகாணம் 1600 இறப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடித்தால் மேலும் 200 இறப்புகளுடன் இத்தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

இத்தொற்றால் ஒன்ராறியோவில் 3000 முதல் 15000 வரை இறப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றும் இது ஏறக்குறை 24 மாதங்களுக்குத் தொடரும் வாய்ப்பு எண்டு என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

இதுவரை நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களில் 21.3 வீதமானோர் பயணங்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். 12.5 வீதமானோர் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள். 17.9 வீதமானோருக்குக் காரணம் தெரியவில்லை. 48.9 வீதமானோர் பற்றிய முடிவுகள் வெளிவரவரவில்லை.





Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...