கோவிட் 19 - பிரித்தானியா பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்ட்டிருக்கும் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மேலதிக சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் இவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
உடல் வெப்பநிலை உட்பட தொற்றின் அறிகுறிகள் சற்று பலமாக வெளிப்பட்டதையடுத்து இவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இவர் மருத்துப பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. பிரமதே இப்போதும் பொறுப்புகளில் உள்ளார் என்ற பொழுதிலும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான கூட்டத்திற்கு பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளரே தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஒருநாள் மட்டுமே மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனக் கூறப்படுகின்றது.

Comments
Post a Comment