Skip to main content

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை வீழ்ச்சி!

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை பெரு வீழ்ச்சி! 

கடந்த 24 மணிநேரத்தில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 347 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரத்தின் பின் ஏற்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையாக இது நோக்கப்படுகின்றது. அதேவேளை 45 இறப்புகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஏப்ரல் 24 அன்று, அதிக உயர்வாக 640 காணப்பட்டது. பின்னர் குறைவடைந்து நேற்று 525 ஆக உயர்ந்திருந்தது. எனினும் இன்றைய வீழ்ச்சி மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கின்றது.

ஒன்ராறியோ கோவிட் 19 என்ற கிருமித் தொற்றின் உச்சத்தில் இருந்து இறங்கத் தொடங்கியுள்ளது என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடந்து இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை "சீரான" வீழ்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகே தொற்றுர் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, வணிக நிறுவனங்களைத் திறப்பது தொடர்பாக சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதன்மையான பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளைத் திறப்பதுடன், தொற்றுத் தொடர்பாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவல்ல பணியிடங்களை மீண்டும் திறக்க முனைகின்றோம் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

நாளாந்த நோயாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சி, தற்செயலானதாகவும் இருக்கலாம். நமது கணிப்பிலும் தவறுகள் இருக்கலாம். இதனுடைய தொடர் வீழ்ச்சியை உற்று அவதானித்த பின்னரே நாம் தொற்றுப் பரவல் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வர முடியும் என சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் செவ்வாயன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மாகாணத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட 15,728 நோயாளர்களில் இதுவரை 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...