ஒன்ராறியோவில் இன்று 514 புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தோடு தொற்றுக்கு உள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 8960 ஆக உயர்ந்துள்ளது. இதில் இறந்தோர், குணமடைந்தோர் எண்ணிக்கையும் உள்ளடங்கும்.
இன்று 38 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு ஒன்றாறியோவில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 423 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் ஏறக்குறையப் பாதிப்பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வாழ்ந்தோர் ஆவர்.
இத்தொற்றுக் காரணமாக 807 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 263 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9001 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 4323 பேர் பரிசோதனைக்காகக் காத்திருக்கின்றனர்.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில் 271 பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வாழ்வோர் ஆவர்.

Comments
Post a Comment