Skip to main content

ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

இன்று தொற்று எண்ணிக்கை 525

கடந்த மூன்று நாட்களாகக் குறைவடைந்து சென்ற நாளாந்த தொற்று எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. இன்று இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை 437 தொற்றுகள் பதிவாகியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிக உயர்வாக 640 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருந்தன.

கடந்த 3 நாட்களாக எண்ணிக்கை குறைவடைந்து சென்றமை, நோயின் தாக்கம் குறைவடைகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நேற்றையை விட, 88 புதிய தொற்றுகளால் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிக இறப்புகள் அறிவிக்கப்பட்ட நாள் இன்றே.

 தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சீராக இருப்பதாகத் தெரிகிறது.

 ஐ.சி.யூ யூனிட்களில் கோவிட் -19 உடன் 239 பேர் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன, நேற்று இது 241 ஆக இருந்தது. ஏப்ரல் 9 ஆம் திகதி அதிக உயர்வாக 264 அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இத்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் 957 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களை விடவும் சாதாரண பொதுமக்களும் கணிசமான அளவு இத்தொற்றுக் உள்ளாகி வருகின்றனர். அரசு நடைமுறைப்படுத்தும் நேரடி நெருக்க இடைவெளியை முறையாகப் பேணத் தவறுதல், கையுறை, சுவாசத் தடுப்பு, போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தத் தவறுவதுமே காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...