ஒன்ராறியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் கோவிட் 19 தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர். இதுவே ஒரு நாளில் நிகழ்ந்த அதிகூடிய இறப்பு எண்ணிக்கையாகும்.
இத்தோடு மொத்தமாக 1082 இறப்புகளை மாகாணம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 459 என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய எண்ணிக்கைனயை விட இது அதிகரித்திருக்கின்றது. எனினும் தொற்றின் அதிகரிப்பு வேகம் உச்சநிலையில் இருந்து குறைவடைந்து செல்வதை புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்ட போதும் தொடர் எண்ணிக்கை அதிகரிப்பில் வீழ்ச்சிப் போக்கினை அவதானிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 6 நாட்கள் 500 க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.
ஆறு வாரங்களுக்குக் பின் நோய்த்தொற்றின் உச்சப் பாதிப்பைக் கடந்துவிட்தாக ஒன்றாரியோ அரசு தெரிவித்திருக்கின்றது. நாளொன்றுக்கு 14 ஆயிரம் சோதனைகளை நடத்துவதற்கு அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. புதன்கிழமை இது 12,928 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
"நாம் நோயின் உச்சத்தாக்கத்தைக் கடந்து விட்டோம். வழமைக்குத் திரும்பும் காலத்தை நெருங்கி வருகின்றோம். நான் இப்போது வழமைக்குத் திரும்பும் நாட்களை வரையறுத்துக் கூற முடியாது. ஆனால் அந்த நாட்களை நாம் நெருங்கி வருகின்றறோம் என்று உங்களுக்குக் கூற முடியும்." என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment