Skip to main content

கோவிட் 19 இன்றைய ஒன்ராறியோ – ஏப்ரல் 7 11:30 AM


கோவிட் 19 இன்றைய ஒன்ராறியோ – ஏப்ரல் 7 11:30 AM

ஒன்ராறியோவில் இன்று 379 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 21 புதிய இறப்புகளையும் ஒன்ராறியோ பதிவுசெய்துள்ளது.

நேற்று பதிவான தொற்றுகளை விட இது 70 தொற்றுகளால் இன்று அதிகரித்துள்ளது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவான 462 என்ற எண்ணிக்கையை விட இது குறைவானதாகும்.

ஒன்ராறியோவில் இயங்கும் 34 பொது நலத்துறைப் பிரிவுகளால் வழங்கப்பட்ட தகவல்களில் அடிப்படையில் இதுவரை நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 164 எனப் பட்டியலிடப்பட்டாலும் மாகாணம் 153 இறப்புகளையே பட்டியலிட்டுள்ளது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் வெவ்வேறு நேரங்களில் பெறப்பட்ட தகவல்களே என்று கூறப்படுகி;னறது.


இதற்கிடையில் மருத்துவமனையில தொற்றுகளால் அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒன்ராறியோவின் மருத்துவமனைகளில் இத்தொற்றால் பாதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆகும். இவர்களில் 233 பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட நான்கு சத வீதத்தால் அதிகரித்துள்ளது. 


தற்போது 614 பேர் உள்ளனர், இதில் ஊழுஏஐனு-19 வழக்குகள் உள்ளன, இதில் 233 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 216 பேர் உட்பட 589 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திங்கள்கிழமை முதல் இது நான்கு சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

தொற்றுத் தொடர்பான சோதனைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை முன்பை விடக் குறைவடைந்தாலும் நேற்றைய எண்ணிக்கையான 329 விட இன்று 691 ஆக அதிகரித்துள்ளது.

இத்தொற்றுக் தொடர்பாக நீண்டகால பாராமரிப்பு இல்லங்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. 51 பராமரிப்பு இல்லங்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன. இறந்தோரில் 69 பேர் இந்த இல்லங்களில் வசித்தோராவர்.  இன்று வெளியான இறப்பு எண்ணிக்கையில் 13 பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களி;ல வாழ்ந்தவர்களே.

இத்தரவுகளுக்கு அமைய இத்தொற்றால் ஒன்ராறியோவில் பாதிக்கப்ப்டட மொத்த நோயாளர் எண்ணிக்கை 4726 ஆக உயர்ந்துள்ளது. இது இறந்தவர்களும் குணமடைந்தவர்களும் அடங்குவர். இதுவரையில் 1802 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...