Skip to main content

தடுப்பூசி இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம்

தடுப்பூசி இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் - ஜப்பானிய மருத்து சங்கம்

கோவிட்-19 தொற்று நோய்க்குப் பொருத்தமான தடுப்பூசியைக் கண்டுபிடிக்காத நிலையில் ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் மருத்துவ சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாடுகளில் யாவற்றிலும் கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இந்த போட்டிகளை நடத்த முடியும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

 பொருத்தமான தடுப்பூசி ஒன்று இல்லாமல் இந்த போட்டிகளை நடத்துவது எளிதாக இருக்கப் போவதில்லை என மருத்துவர் ஜோஸ்ராகே யோகோகுரா(Yoshitake Yokokura) கூறியுள்ளார்.

ஜப்பானில் இதுவரை 13 ஆயிரத்து 576 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அங்கு துறைமுகம் ஒன்றில் நிற்கும் ஒரு கப்பலில் மட்டும் 712 நோயாளிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை 389 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் நாடெங்கிலும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளது.

இவ்வாண்டு நடைபெறவிருந்த ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு ஜூலை 23 வரை ஒத்திவைக்க ஜப்பானும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளமும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.

இந்த போட்டிகளை அடுத்த ஆண்டு நடத்துவதாக இருப்பினும் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே போட்டிகளை நடத்த முடியும் என தொற்றுநோய்ப் பேராசிரியர் கென்டோரா இவாடா தெரிவித்திருக்கின்றார்.

அடுத்த ஆண்டு இந்த போட்டிகளை நடத்துவதில் பெரும்பாலும்  சிரமங்களும் இருக்க போவதில்லை என்று ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான யோசிரோ மேரி(Yoshiro Mori) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டில் போட்டி நடைபெற முடியாத நிலை ஏற்பட்டால், அது 2022 ஆம் ஆண்டுக்குப் பிற்போடப்படுமாவென என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் யோசிரோ மேரி, அந்நாட்டுப் பிரதர் ஷின்சோ அபே, “அடுத்த ஆண்டில் போட்டிகளை நடத்துவது சாத்தியமாகாவிட்டால் அவை இரத்துச் செய்யப்படுமென” பதிலளித்தனர்.




Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.