இங்கிலாந்து கிறிக்கட் அணியின் 28 அகவையுடைய இளம் விளையாட்டு வீரர் வென் ஸ்ரோக்ஸ் (Ben Stokes) இவ்வாண்டுக்கான(2020) உலகின் தலைசிறந்த கிறிக்கட் வீரரென(leading cricketer) விஸ்டன் (Wisden) விளையாட்டுச் சஞ்சிகை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு(2019) ஜூலையில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றியதுடன் அப்போட்டியின் சிறந்த விளையாட்டு வீரருக்கான கௌரவத்தையும் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் இறுதியாக விஸ்டனின் உலகின் தலைசிறந்த கிறிக்கட் வீரரென 17 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றூ ஃபிலின்ரோப் ( Andrew Flintoff) அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்பாகக் கடந்த மூன்று ஆண்டுகள் இந்திய அணித் தலைவர் விராட் கோலி(Virat Kohli) உலகின் தலைசிறந்த கிறிக்கட் வீரரென விஸ்டென் பிரகடனம் செய்திருந்தது.

Comments
Post a Comment