சிறுவணிக நிறுவனங்கள் வாடகை செலுத்துவதில் உரிமையாளர்கள் நெகிழ்ச்சிப் போக்கைப் கடைப்பிடிக்க வேண்டும் என ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரொரி தெரிவித்துள்ளார்.
தீவிர நோய்த்தொற்றுக் காரணமாக வணிகச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டதையடுத்தும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து வருமான இழப்புகளுக்கு உள்ளான நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. கட்டட உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தப் பாரிய சிக்கல் மாநகர முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, வாடகை செலுத்த முடியாத வணிக நிறுவனங்களை உரிமையாளர் வெளியேற்ற முயல்வதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் சிக்கல் குறித்து, சமகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இருதரப்பும் பேசி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை செலுத்த முடியாத நிலையில், வீட்டில் வசிப்போரை வெளியேற்ற முடியாது என ஒன்றாரியோ அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment