நாங்கள் உச்சத்தைக் கடந்து விட்டோம் - ஸ்பெயின் பிரதமர்
நாங்கள் கோனா வைரஸ் தாக்கத்தில் உச்சத்தை கடந்துவிட்டோம் என ஸ்பெயின் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இறப்போர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து இந்த கருத்தைப் பிரதமர் வெளியிட்டு இருக்கின்றார் .
ஒரே நாளில் 809 பேர் இறந்து இருப்பது ஸ்பெயினில் ஒரு வாரத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளே உயிர்களைக் காப்பாற்றி வருவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இறப்புகள் குறைவடைவது மக்களிடையே நம்ம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கபடுகின்றது.

Comments
Post a Comment