கனடாவில் பாற் பண்ணையாளர்கள் கொரோனா நுன்ணுயிர் தொற்றுக் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏறக்குறைய 500 பாற் பண்ணைகள் வாரம்தோறும் 5 மில்லியன் லிட்டர் பாலைத் கொட்டிவிடத் தயாராகி வருகின்றன.
இத்தொற்றினால் தங்கும் விடுதிகளும் உணவகங்களும் பெருமளவில் வணிகத்தை இழந்ததைத் தொடர்ந்து பெருமளவு பால் பண்ணைகளில் தேங்கத் தொடங்கியுள்ளது. பிற பாற் பொருள் உற்பத்திகளுக்கான பயன்பாடு போக, பெருமளவு பால் மிஞ்சிக் கிடக்கின்றது.
அதிகப்படியான பால் வழங்கல், விலைகளின் சீரான நிலையைப் பாதிக்கும் என்பதால் மாடுகளில் இருந்து பெறப்படும் முதற்பாலை (Raw Milk) கொட்டிவிதவற்கு பால் உற்பத்திப் பண்ணையாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
தொற்று நோயின் தாக்கத்துக்கு முன்பாக, கனடாவின் பால் உற்பத்தி பற்றாக்குறையாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரிரு வாரங்களுக்கு முன்னர் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பால் உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 55 ஆண்டுகளில் இப்போதே பாலைக் கொட்டுமாறு கேட்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் தலைமை இயக்குனர் செரில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இயங்கிவரும் பால் உற்பத்தி – மேலாண்மை அமைப்பு பால் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என்பவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றது.

Comments
Post a Comment