Skip to main content

விபத்துக்குள்ளான கனடிய உலங்குவானூர்தியில் இருந்து ஒரு அதிகாரியின் உடலம் மீட்பு!

மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான கனடிய உலங்குவானூர்தியில் இருந்து முதலாவது கனடியப் படைத்துறையைச் சேர்ந்த துணை லெப்டினன் தர பெண் அதிகாரி Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மத்தியதரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் நடவடிக்கை ஒன்றில் கிறேக்கத்திற்கும், இத்தாலிக்கும் இடையில் HMCS Fredericton என்ற கனேடிய கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து இயங்கிய வான்படையின் புதிய CH-148 Cyclone ரக உலங்குவானூர்தியின் தொடர்பு  நேற்றிரவு துண்டிக்கப்பட்ட நிலையில், இது காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் குறித்த வானூர்தி கடலில் வீழ்ந்து நொருங்கியதாகவும், அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இணைந்து தேடுதலை மேற்கொண்ட கனேடிய, இத்தாலிய, துருக்கிய கடற்படைக் கப்பல்கள் ஒரு உடலத்தை மீட்டுள்ளதுடன், அது Sub-Lt. Abbigail Cowbrough இன் உடலம் என்று அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pic from FB Sub-Lt. Abbigail Cowbrough

இந்நிலையில் தொடர்ந்தும் ஏனைய உடலங்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்படுகிறது .

இந்த விபத்தில் ஆறு கனடியப் படையதிகாரிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய கனடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜன், தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக கூறினார்.

அவ்வாறே இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு வீரர்களையும் போர் வீரர்களாக நினைவு கூர்ந்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, இந்த விபத்துத் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...