Skip to main content

கனடாவில் கொறொனா வைரஸ் தொற்று 10,000 ஐக் கடந்தது

கனடாவில் கோவிட் 19 கொறோனா வைரஸ் பரம்பலைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் 90 சதவீதமான கனேடியர்கள் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நிலை தொடர்வதை 44 சதவீதமானவர்களும், சுகாதாரத்துறையால் கையாளக்கூடிய அளவுக்கு நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அதை ஆதரிப்பதாக 46 சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டுமென பத்துச் சதவீதமானவர்களும், வழமை நிலை திரும்பவேண்டுமென மூன்று சதவீதமானவர்களும் கூறியுள்ளார்கள்.

65 சதவீதமானவர்கள் உடல்நல பாதிப்புக் குறித்தும், 24 சதவீதமானவர்கள் பொருளாதார பாதிப்புக் குறித்தும் கவலைகொண்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.

இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஏப்ரல் 02ம் நாள் சுமார் பத்தாயிரத்தை கடந்துள்ளது.

இன்று 11 மணிவரையான கனடிய புள்ளிவிபரத் தகவலின் பிரகாரம், 10 ஆயிரத்து 113 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அத்துடன் மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 131 என்றும், இவற்றில் ஒன்றாரியோவில் 53 உயிரிழந்துள்ளனர். மற்றும் ஒன்டாரியோவில் 2793 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 831 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1528 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆகக் கூடுதலாக குபெக்கில் 4,611 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 33 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

அவ்வாறே பிரிட்டிஸ் கொலம்பியாவில், 1066 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...