Skip to main content

அவசர நிதியைப் பெற முதல் நாளில் ஆறரை இலட்சம் விண்ணப்பங்கள்.

மத்திய அரசின் அவசர நிதியைப் பெற முதல் நாளில் ஆறரை இலட்சம் விண்ணப்பங்கள்.

கோவிட்-19 கொறோனா வைரஸ் காரணமாக வருமானம் இழந்தோருக்கான மத்திய அரசின் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று ஏப்ரல் 06ம் நாள் காலை ஆறு மணி முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இன்று முதல் நாளில் பிற்பகல் வரையான தகவலின் பிரகாரம் சுமார் ஆறு இலட்சத்து நாற்பத்தையாயிரத்துக்கும்(6,40,000) மேற்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழி ஊடாகவும் தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

கனடா வருமானவரித் முகவரகத்தின் இணையத்தளத்தில் MY CRA
கணக்கொன்றை ஆரம்பித்து அதன் ஊடாக அல்லது, 1-800-959-2019 என்ற கட்டணமற்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக மக்கள் இந்தக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கின்னறனர்.

ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் பிறந்தவர்கள் திங்கட்கிழமைகளிலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமைகளிலும், ஜூலை, ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளிலும், இறுதி நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாவைப் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் கடந்த 12 மாதங்களில் குறைந்தது ஐந்தாயிரம் டொலரை வருமானமாக பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தது கடந்த இரண்டு வாரங்களில் வேலை வாய்ப்பை இழந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்;கப்பட்டுள்ளது.

நேரடி வங்கி வைப்புக்கு விண்ணப்பிப்போருக்கு ஐந்து நாட்களுக்குள் வைப்பிலிடப்படும் என்றும், ஏனையோருக்கு 10 நாட்களுக்குள் காசோலைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...