Skip to main content

கோவிட் -19 கனடா: கொறோனா தொற்றும் பொருளாதார செயற்பாடுகளும்.


கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 48500 ஆக உயர்வடைந்தது. இவர்களில் 2707 பேர் மரணித்துள்ளதுடன், 18281 பேர் குணமடைந்துள்னர்.

குபெக் மாகாணத்தில் கொறோனா நுண்மித் தொற்றுக்கள் 24982 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 1599 பேர் மரணித்துள்ளதுடன், 5517 பேர் குணமடைந்துள்ளனர்.

அடுத்தாக, ஒன்றாரியோவில் இன்று(ஏப்ரல் 27) புதிதாக 424 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14856 ஆக உயர்வடைந்தது.

இவர்களில் 892 மரணத்துள்ளதுடன், 8526 பேர் குணமடைந்துள்ளனர்.

அடுத்தாக அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணங்களில் முறையே 4696, 1998 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முiறேய 75, 103 ஆக காணப்படுகிறது.

இதேவேளை ஒன்றாரியோ மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான மூன்று கட்டத் திட்டத்தை முதல்வர் டக் ஃபோர்ட் இன்று வெளியிட்டார்.

இரண்டு தொடக்கம் நான்கு வார காலப்பகுதியில் நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்த பின்னர் முதற் கட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

முதற் கட்டத்தில் பூங்காக்கள் போன்ற சில பொது இடங்கள் திறக்கப்படுவதுடன், அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பமாவதுடன், சில பணியிடங்களும் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கும்.

அடுத்ததாக, இரண்டாம் கட்டத்தில் மேலதிக அலுவலகங்கள், சேவை நிலையங்கள் போன்ற மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.

இறுதியாக மூன்றாம் கட்டத்தில், மிகுதியாகவுள்ள ஏனைய தொழிற்துறைப் பணியிடங்கள் பொறுப்புள்ள வகையில் திறக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இருந்த போதும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இசை நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை குபெக் மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகள் குறி;த்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அவ்வாறே ஏனைய மாகாணங்களதும், பிரதேசங்களதும் திட்டவரைபுகள் வெளியாகவுள்ளன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.