கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று விடயத்தில் கனடியர்கள் தமது குடும்ப மருத்துவர் உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களின் ஆலோசனையையே கூடுதலாக நம்புவதாக கருத்துக் கணிப்பொன்று வெளியாகியுள்ளது.
Leger என்ற கருத்துக்கணிப்பு நிறுவகமும், கனடியர்களின் கல்வித்துறை சார்ந்து இயங்கும்
The Association for Canadian Studies என்ற இலாபநோக்கற்ற நிறுவகமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்று விடயத்தில் கனடியர்கள் முன்னிலைப் பணியாளர்களான மருத்துவர்களையும், தாதிகளையும் 92 சதவீம் நம்புவதாகவும், பொதுச் சுகாதார அதிகாரிகளை நம்புவோரின் அளவு 81 சதவீதமெனவும்,
கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார மருத்துவர் தெரீசா ராமை (Theresa Tam) நம்புவோர் 72 சதவீதமெனவும் கருத்துக் கணிப்பு காட்டுகின்றது.
உலக சுகாதார அமைப்பு(WHO- The World Health Organization) மீது 68 சதவீதமானவர்களும், கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீது 54 சதவீதமானவர்களும் நம்பிக்கை கொண்டிருப்பதாக இக்கருத்துக் கணிப்பின் தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சீனாவின் வூஹானில் இருந்து பரவ ஆரம்பித்த கொறோனா நுண்மித் தொற்று. இன்று 210 நாடுகளைக் கடந்து, அனைத்துலக ரீதியான அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தொற்றாக மாற்றமடைந்துள்ளது.
இந்த விடயத்தை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம், குறிப்பாக அனைத்துலக ரீதியாக விழிப்புணர்வைக் கொண்டு வந்த விதத்தில் மக்கள் ஏமாற்றத்தை அடைந்துள்ளதுடன், விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, கோவிட்-19 தொடர்பில் செய்திகளையும், துறைசார் மேம்பாட்டாளர்களின் அறிவுரைகளையும் வழங்கிவரும் ஊடகங்கள் மீதான நம்பிக்கை 50 சதவீதமாக இருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்புக் காட்டுகிறது.
இந்தப் புள்ளிவிபரங்கள் ஆச்சரியமளிக்கவில்லையெனவும், தமக்கு நெருக்கமானவர்களையே மக்கள் நம்புவது வழமையெனவும் கருத்துக் கணிப்பை நடத்திய நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி Christian Bourque தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment