Skip to main content

கோவிட்-19 கனடா: மருத்துவமனைகளில் கொறோனா தொற்று அபாயம் இல்லை.

கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,393 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2905 ஆக காணப்படுகின்றது.

எனினும் தொற்றுக்குள்ளாவோரின் வேகம் குறைவடைந்து செல்வதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் தெரிவித்தார்.

இதேவேளை கொறோனா நுண்மித் தொற்று அச்சம் காரணமாக உயிராபத்தான மாரடைப்பு போன்ற நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போதும், பாதிக்கப்படுவோர் மருத்துவமனைக்கு செல்ல அச்சுகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில், மருத்துவமனைகளில் கொறோனா நுண்மித் தொற்று அபாயம் இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்படும் நிலையில், முறைப்படியாக பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பல்வேறு படிமங்களில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் நோர்த் யோர்க்
பொது மருத்துவமனையிலும், ரொறண்டோ சிக் கிட்ஸ்  மருத்துவமனையிலும் கொறோனா தொற்றுப் பரவல் ஏற்படட போதிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிக் கிட்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்ற பதின்ம வயதான ஒருவருக்கு கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

எனினும் மருத்துவமனையின் குறித்த பிரிவில்
சிகிச்சை பெற்ற ஏனைய சிறுவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் பெற்றோருக்கும், பராமரிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

அவ்வாறே, நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் மூன்று நோயாளிகளுக்குக் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.

இதேவேளை, ஒன்றாரியோவில் கொறோனா நுண்மித் தொற்று காரணமாக இருதய சத்திரசிகிச்சைகள் இடம்பெறாதமையால் 35 பேர் மரணமானதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்ரீன் எலியட் கூறியுள்ளார்.

கொறோனா தொற்றைக் கையாண்ட நிலையில், எதிர்பாராத எண்ணிக்கையில் மருத்துவமனையில்  படுக்கை வசதிகள் தேவைப்பட்ட ஐம்பத்திரெண்டாயிரம்(52,000) சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

எனினும் குறுகிய காலத்திற்கே இவ்வாறு சத்திரசிகிச்சைகளை பிற்போட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இவை நீண்டகாலத்திற்கு பிற்போடப்படும் இடத்து பாதிப்புக்கள அதிகமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...