கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,672 ஆகவும், மரணமானவர்களின் எண்ணிக்கை 1,681 ஆகவும் அதிகரித்துள்ளன.
சுமார் பன்னிரெண்டாயிரத்து ஐநூற்று இரண்டு(12502) பேர் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.
குபெக் மாகாணத்தில் 19,319 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 939 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
ஒன்றாரியோவில் இன்று புதிதாக 606 தொற்றுக்களுடன் மொத்தமாக 11,184 பேருக்கு நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று நிகழ்ந்த 31 மரணங்களுடன் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637 ஆக உயர்வடைந்து.
அல்பேட்டாவில் மாகாணத்தில் 2,908 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 59 பேர் மணித்தும் உள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1647 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 84 பேரும் மணித்துள்ளனர்.


Comments
Post a Comment