Skip to main content

கோவிட்-19 ஆபிரிக்க தேசத்தை தாக்கும் அபாயம்!

சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 கொறோனா நுண்மித்(வைரஸ்) தாக்கம் இனம், மதம், சாதி. மொழி கடந்து 210க்கும் மேற்பட்ட நாடுகளில் தொற்றுக்களையும் மரணங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

இன்று ஏப்ரல் 17 வரை அனைத்துலகரீதியாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு கொண்டுள்ளதுடன், 2.2 மில்லியன் மக்களை தொற்றுக்குள்ளாக்கியுள்ளது. இவர்களில் 571,888 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த கொறோனா நுண்மித் தாக்கம் ஆபிரிக்க நாடுகளை தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆபிரிக்காவில் தற்போது சுமார் 18,000 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 1000 பேர் வரை மரணித்துள்ளனர்.

கோறொனா நுண்மித் தொற்றுக்குள்ளாகிய நாடுகளின் வரிசையில், பிந்தியதாக காணப்பட்டாலும், தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.

ஆபிரிக்காவில் மூன்று இலட்சம் முதல் 3.3 மில்லியன் மக்கள் வரை இத்தொற்றுக் காரணமாக உயிரிழக்கக் கூடுமென லண்டனில் உள்ள இம்பீரியல் கொலிஜ்ஜின் (Imperial College London) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடுகளில் கோவிட்-19 தொற்று ஏற்படுமாக இருந்தால், அதன் விளைவு சீனாவில் ஏற்படுத்திய விளைவுகளை விட அதிகமாக இருக்கும் என்று மைக்றோ சொப்டின் இணை நிறுவுனர் பில் கேட்ஸ், பெப்ரவரியில் எச்சரித்திருந்தார்.

கோவிட்-19 தொற்று நாடுகளில் ஏற்படுத்திய மரணம், பாதிப்புக்களின் வரிசையில் அமெரிக்காவில் 710,021 தொற்றுக்களும், 37,158 மரணங்களும், ஸ்பெயினில் 190,839 தொற்றுக்களும், 20,002 மரணங்களும், இத்தாலியில் 172,434 தொற்றுக்களும், 22,745 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அடுத்த படியாக பிரான்ஸில் 147,969 தொற்றுக்களும், 18,681 மரணங்களும், ஜேர்மனியில் 141,397 தொற்றுக்களும், 4352 மரணங்களும், பிரித்தானியாவில் 108,692 தொற்றுக்களும், 14,576 மரணங்களும் பதிவாகியுள்ளன.

சீனாவில் இதுவரை 82,719 தொற்றுக்களும், 4636 மரணங்களும் பதிவாகியுள்ளன.

கனடாவில் இதுவரை 31,927 தொற்றுக்களும், 1366 மரணங்களும் சம்பவித்துள்ளன.

இதேவேளை, சீனாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று ஆரம்பமாகியதாகக் கருதப்படும் வூஹானில், இந்த தொற்றுக் காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விடச் சுமார் ஐம்பது சதவீதம் அதிகமானதென அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

வூஹானில் மரணமானவர்களின் எண்ணிக்கை 1290 ஆல் அதிகரித்து 3,869 ஆக உயர்வடைந்துள்ளதென அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதையடுத்துச் சீனாவில் மரணமானவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக அதிகரித்துள்ளதாக Johns Hopkins  பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...