கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59,266 ஆக பதிவாகியுள்ளது.
கொறோனா தொற்றால் அனைத்துலக ரீதியாக
முப்பத்தொரு இலட்சத்துப் பதின்மூவாயிரத்தைக்(3,117,880) கடந்துள்ளதுடன் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறாக(217,756) காணப்படுகின்றது.
எனினும் அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்துப் பன்னிரெண்டாயிரத்தைக்(1,012,583) கடந்துள்ளது. அங்கு ஐம்பத்தொன்பதினாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமானார்கள். வியட்னாம் போர் முழுவதிலும் மரணமான அமெரிக்கர்களை விட அதிகமானோர் அங்கு கொறோனா தொற்றால் மரணமாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1968ம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் போரில் பதினேழாயிரம்(17,000) அமெரிக்கத் துருப்பினர் மரணித்தனர். ஆனால் கொறோனா தொற்றால் அனைத்துலக ரீதியாக மரணித்துள்ளவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தபடியாக ஸ்பெய்னில் 232,128 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இவர்களில் 23,822 பேர் மரணித்துள்ளனர்.
எனினும் அங்கு கொறோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டத்தின் விபரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் நாளின் பின்னர் படிப்படியாக அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
இதேவேளை இத்தாலியில் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 202,000ஆக காணப்படுகிறது. இவர்களில் 27,359 பேர் மரணித்துள்ளனர்.
இத்தாலியிலும், பிரித்தானியாவிலும் தொற்றால் பாதிக்கப்படும் சிறார்கள் மற்றும் குழந்தைகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில், இவ்விடயம் குறித்து இரண்டு நாட்டு மருத்துவர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் தொற்றால் 162,350 பாதிக்கப்பட்டவர்களி;ன் எண்ணிக்கை ஆகவும், மரணித்தவர்களின் எண்ணிக்கை 21,678 ஆகவும் உள்ளது.
ஃபிரான்சில் கொறோனா தொற்றால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பேர் மரணித்தும் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரும், பள்ளிக்கூட மாணவர்களும் சுவாசக் கவசங்களை அணியவேண்டுமென இந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வாரங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படவுள்ளன.

Comments
Post a Comment