கோவிட்-19 கொறோனா கொல்லுயிரி தொற்றை கட்டுப்டுத்தும் வண்ணம், வணிக ரீதியாகவும் அத்தியாவசிய தேவைகள் நிமிர்த்தமும் மட்டுப்படுத்தப்பட்ட பிரயாணங்கள் கனடிய அமெரிக்க எல்லை ஊடாக நடைபெற்றுவரும் நிலையில், அவை மேலும் இறுக்கமடையலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் வண்ணம் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பிரயாணங்கள் எல்லைப் பகுதியூடாக நடைபெற்று வருகின்றது.
எனினும் அமெரிக்காவில் கொல்லுயிரி தொற்றால் முப்பத்தோராயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்தும், சுமார் 640,000க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியும் உள்ளனர்.
அவ்வாறே 22 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இன்று வரை தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் மே மாதத்துக்குள் 37 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான Goldman Sachs தெரிவித்துள்ளது.
எனினும் விரைவில் நிலைமை வழமைக்கு திரும்பும் என்று குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்றம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கனடிய துணைப் பிரதமர் கிறிஸ்ரியா ஃபிறீலாண்ட், இந்த விடயம் குறித்து அமெரிக்க நிர்வாகத்துடன் முக்கிய கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Comments
Post a Comment