கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று பிரச்சனை காரணமாக கனடிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு உதவும் வண்ணம் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஊதிய மாநியச் சட்டமூலம் இன்று (ஏப்ரல் 11) நிறைவேற்றப்பட்டது.
கொறொனா வைரஸ் தொற்றையடுத்து கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிவர்த்தி செய்யும் அதேவேளை, பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள கனடிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக 73 பில்லியன் டொலரைக் கொண்ட இந்த அவசரகால மானிய ஊதியச் சட்டம் (CEWS-Canada Emergency Wage Subsidy )
இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
338 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட 20 உறுப்பினர்களுடன் கூடிய அவையில், இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் நாயகம் ஜூலி பயற்றேயின் ஒப்புதலுடன் சட்டமூலமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த இடர்காலத்தில் தனது வருமானத்தின் குறைந்தது 30 சதவீதத்தை இழந்த வணிக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பணியார்களை அந்நிறுவனங்கள் மீளவும் இணைந்துக் கொள்ளவுள்ளன.
இந்நிலையில் அவர்களின் மாதாந்த வேதனத்தின் 75 சதவீத கொடுப்பனவை, அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு அரசு வழங்கவுள்ளது.
கொறொனா வைரஸ் தொற்றையடுத்து கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நிவர்த்தி செய்யும் அதேவேளை, பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள கனடிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக 73 பில்லியன் டொலரைக் கொண்ட இந்த அவசரகால மானிய ஊதியச் சட்டம் (CEWS-Canada Emergency Wage Subsidy )
இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
338 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட 20 உறுப்பினர்களுடன் கூடிய அவையில், இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் நாயகம் ஜூலி பயற்றேயின் ஒப்புதலுடன் சட்டமூலமாக்கப்பட்டுள்ளது.
![]() |
| Governor General Julie Payette |
இந்நிலையில் அவர்களின் மாதாந்த வேதனத்தின் 75 சதவீத கொடுப்பனவை, அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு அரசு வழங்கவுள்ளது.

Comments
Post a Comment