Skip to main content

கோவிட்-19: கனடிய நிலவரம்

கோவிட்19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாற்பத்தாறாயிரத்தைக் கடந்தது.

கனடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை நுண்மித் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,848 ஆக உயர்வடைந்ததுடன், அவர்களில் 2560 மரணித்துள்ளனர். 17328 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குபெக் மாகாணத்தில் 24107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 1515 பேர் மணித்துள்ளனர்.

இரண்டாம் நிலையில் உள்ள ஒன்டாரியோவில் இரண்டு வாரங்களின் பின்னர், குறைந்தளவிலான கொறோனாத் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இன்று வெளியாகிய தரவுகளின்படி, ஒன்ராறியோவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 437 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதுடன், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றயதினம் 476 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகிய எண்ணிக்கை அதனை விட குறைவாக அமைந்துள்ளமை சற்று நம்பிக்கையை அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 13ம் திகதி 421 பேர் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாகவம், 17 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய எண்ணிக்கையே மிகவும் குறைந்தளவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்ராறியோவில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14432 ஆக அதிகரித்துள்ளதுடன், 835 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அடுத்தபடியாக அல்பேர்ட்டாவிலும் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் முறையே 4233 பேருக்கும், 1948 பேருக்கும் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், முறையே 73 மற்றும் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதேவேளை, கனடாவின்சில மாகாணங்களில் மீண்டும் பொருளாதாத்தை செயற்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

குறிப்பாக ஒன்ராறியோ மற்றும் குபெக் மாகாணங்கள் தமது திடடங்கள் தொடர்பாக அடுத்தவாரம் விபரங்களை வெளியிடவுள்ளன.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாகாண முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ, ஏற்கனவே கோவிட்19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...