Skip to main content

உயிர்த்த கிறிஸ்து உயிர்கொல்லியான கோவிட்-19 ஐ ஒழி;க்கட்டும் - அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை

இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை உலக மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறைமக்களாகிய நாம் எமது தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கின்றோம். கிறிஸ்து இயேசுவின் பாடுகள் – இறப்பு – உயிர்ப்பு இன்றைய பயங்கரமான சூழலில் எமக்கு ஆழமான இறை விசுவாசத்தை உணர்த்தி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கோரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது. உயரிழப்புக்கள் மலிந்து, பொருளாதாரம் நலிந்து சொல்லொணா வேதனைகளுடன் மனுக்குலம் முழுவதும் கல்வாரிப் பாதையில், கொல்கொதா மேட்டில் சிலுவை சுமந்து நிற்கின்றது. நிச்சயம் ஆண்டவரின் உயிர்ப்பு நம்மை மீட்கும்.

வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டு ஆலய வழிபாடுகளின்றி வாழும் நாம் எமது வீடுகளை ஆலயங்களாக மாற்றி குடும்ப செபங்களிலும், இறை தியானங்களிலும் ஈடுபட்டு இறை விசுவாசத்தை மேன்மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று நன்றியோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசியல் ரீதியான பகைமைகளையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், மத ரீதியான பிரிவுகளையும் மறந்து, மன்னித்து மனிதநேயம் மிக்கவர்களாக ஒன்றிணைந்து,
நாட்டு நலன், சமூகநலன், குடும்ப நலன் என்பவற்றை பேணிக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடின் அபாயங்களிலிருந்து நாம் மீண்டெழ முடியும்.

‘கோவிட் -19’ தொற்று யாரால் பரவிற்று? ஏன் பரவிற்று போன்ற கேள்விகளை முன்வைத்து வெறுப்புணர்வுகளையும், குரோத உணர்வுகளையும், தேவையற்ற பொய்யான பரப்புரைகளையும் களைந்தவர்களாய் கோரோனாவை ஒழிக்க இறைவன் துணையுடன் செப தபங்கள் வழி ஒன்றுபட்ட மக்களாக வாழ்வோம்.

“வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்” (2 கொரி. 5:15)

அபாயகரமான இவ்வேளையில் நமது நாட்டில் தன்னலங்கருதாப் பணிபுரியும் அர்ப்பணிப்பு மிகுந்த அனைத்து உள்ளங்களையும் நன்றியோடு நினைவுகூருகின்றேன். நமது நாடு உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொறொனா தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பலரின் மனிதநேயப் பணிகளே காரணம் என்பதை நாம் நன்கறிவோம்.

நமது நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரச தரப்பினர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், காவற்துறையினர் உள்ளிட்ட முப்படையினர் அரச மற்றும் தனியார் நிர்வாகத்துறையினர், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவிப்பதுடன் இறை ஆசீரையும் வழங்கி நிற்கின்றேன்.

கொறோனா தாக்கத்தால் உயிர் நீத்தவர்களின் ஆன்மா இறை சந்நிதானத்தில் நித்திய இளைப்பாறுதல் பெற பிரார்த்திப்பதுடன், நோய்வாய்ப்பட்டுள்ள அனைவரும் முழுமையாக சுகமடையவும் பிரார்த்திக்கின்றேன். துன்புறும் மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி அமைதியும் சமாதானமும் நிறைந்த வாழ்வுக்குள் பிரவேசிக்க உயிர்த்த இயேசு அருள்புரிவாராக.

நிறைவாக இறை மக்களாகிய நாம் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை நினைவுகூரும் இவ்வேளையில் உயிருள்ள இயேசு கிறிஸ்துவிடம் முழுமையாக எம்மை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். சிலுவைப் பாதையில் தனது திருக்குமாரனைப் பின்தொடர்ந்த அன்னை மரியாள் எம்முடனும் இத்துன்ப வேளையில் பயணிக்கின்றாள் என்பதை நம்பியவர்களாக அன்னையின் பரிந்துரைக்காக வேண்டி நிற்போம். புனிதர்களின் உறவை நாடுவோம்.

அனைவருக்கும் எனது இறை ஆசீரை வழங்கி செபித்து நிற்கின்றேன். உயிர்த்த இயேசு கொணரும் அன்பும் சமாதானமும் உங்கள் குடும்பங்களில் என்றும் தங்குவதாக!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...