கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் கனடாவில் மாகாண அரசுக்கள் அவசரகால நிலைப்பிரகடணத்தை அறிவித்துள்ள நிலையில், சஸ்கற்றுவானின் வடமேற்கேயுள்ள லோச்ச்(La Loche) புறநகர்க் கிராமத்தில் ஊரடங்குச் உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சஸ்கற்றூனில் இருந்து ஆறாயிரம் (6000) கிலோமீற்றர் வடக்கேயுள்ள லோ-ச்ச் கிராமம்புறப் பகுதியில் நுண்மித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம், சஸ்கற்றுவானில் பத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியைப் பேணல் உள்ளிட்ட விடயங்களும் ஏனைய மாகாணங்களைப் போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் Denesuline மொழியைப் பேசும் பூர்வகுடியின மக்கள் குறைந்தது 30 சதவீதம் வாழும் அக்கிராமத்தில், மக்கள் ஒன்று கூடுவது உள்ளிட்ட விடயங்களை நடைமுறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் காணப்படும் சிக்கல் நிலையை கருத்திற் கொண்டு, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
சஸ்கட்டுவானில் நேற்றைய தினம் புதிதாக ஆறு தொற்றுக்கள் இனம் காணப்பட்ட நிலையில் இதுவரை 313 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 266 பேருக்கு வெளியிடப்பயணம் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டவையாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் சஸ்கற்றுவானில் தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டவர்களில் ஒருவர், அங்கு முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டது.
இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலைவரையான புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொறோனா நுண்மித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33,951 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1529 ஆகவும் காணப்படுகின்றது. அத்துடன் 11,554 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments
Post a Comment