குபெக்கில் தொடக்கநிலைப் பள்ளிக்கூடங்களும், குழந்தைகள் மற்றும் சிறார் பராமரிப்பு நிலையங்களும் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கம் காரணமாக மார்ச் இரண்டாம் வாரத்துடன் அவசரகால நிலைப் பிரகடண அறிவிப்புக்கு அமைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பள்ளிக்கூடங்கள் உட்பட்ட அனைத்தும் மூடப்பட்டன.
நுண்மித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கனடிய மாகாணங்களில் குபெக் முன்னிலை வகிக்கின்றது. இன்று வரை சுமார் 24982 பேர் தொற்றுக்குள்ளாகியதுடன், இவர்களில் 1599 மரணித்துள்ளதுடன் 5517 குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாகாண முதல்வர் ஃபிரான்ஸ்சுவா லெகோல்(Francois Legault), மே 11ம் நாள் முதல் மொன்றியல் தவிர்ந்த ஏனைய நகரங்களில் மூடப்பட்டுள்ள தொடக்க நிலைப் பள்ளிக்கூடங்களும், சிறார் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் யாவும் திறக்கப்படும் என்று கூறினார். மே 19ம் நாள் மொன்றியலிலும் திறக்கப்படுகின்றன.
எனினும் கோவிட்-19 நுண்மித் தொற்று குறிப்பிடும் படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் மாத்திரம் இது சாத்தியப்படும் என்றும் அவர் கோடிட்டு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் யாவும் எதிர்வரும் செப்ரெம்பர் வரை கல்வி நடடிக்கைக்காக மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொருளாதார செயற்பாடுகளை மீண்டும் படிப்படியாக ஆரம்பிப்பதற்கான குபெக் அரசின் திட்ட விபரங்கள் நாளை வெளியிடப்படு;ம் என்று எதிர்வு கூறப்படுகிறது.
இதேவேளை குபெக் பண்ணைகளில் பணியாற்றிய கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கப் பணியாளர்கள் கோவிட்-19 கட்டுப்பாடு காரணமாக கடமைக்கு திரும்பமுடியாத நிலை காணப்படும் நிலையில், மாகாண அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 2800 பேர் உள்ளுர்ப் பணியாளர்கள் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் இப்பணியாளர்களுக்கு மேலதிகமாகப் பணம் வழங்க, 45 மில்லியன் டொலரைக் குபெக் மாகாண அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment