திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள கோவிட்-19 கொறோனா கொல்லுயிரித் தொற்று தனிமைப் படுத்தல் முகாமுக்கு சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியது.
கோவிட்-19 கொறொனா கொல்லுயிரி தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் முகாங்களில் ஒன்றான திருகோணமலை கடற்படை முகாமுக்கு, கொழும்பில் இருந்து சென்ற பேரூந்து, வரக்காபொல சந்தியில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், 29 பேருக்கு காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் 03 பேர் கடற்படை சிப்பாய்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கொல்லுயிரி கொறொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் ஐந்தால் அதிகரித்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளாரவ்களின் மொத்த எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதுடன் 07 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Comments
Post a Comment