Skip to main content

கோவிட்-19: தமிழக நிலவரம்

தமிழகத்தில் கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட 72 பேர் புதிதாக இன்று இனம் காணப்பட்ட நிலையில், அங்கு தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் சுமார் 866 பேர் முற்றாக குணமடைந்துள்ளதுடன், 22 பேர் மரணித்தும் உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்ராவா(Punya Salila Srivastava) தெரிவித்துள்ளார்.

From Twitter
இதேவேளை, தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகப் பகுதியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 07 பேர் இனம் காணப்பட்ட நிலையில் திங்கட்கிழமை வரை முழு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது

பெரம்பலூரில் தீயணைப்பு வீரர், கல்லூரி மாணவர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் 7 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூரில் ஏப்ரல் 27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள. மருந்தகங்கள் தவிர காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஏப்ரல் 26ம் நாள் முதல் ஏப்ரல் 29ம் நாள் வரை காலை 6 மணி முதல், 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறே, சேலம் மற்றும் திருப்பூரில், ஏப்ரல் 26ம் நாள் முதல் ஏப்ரல் 28ம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.