தமிழ் மக்கள் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் என்று ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப் பீதி தொடருமானால் இலங்கையில் இறக்குமதிகள் முழுமையாக பாதிப்படையும் சாத்தியங்கள் காணப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்நிலையை கருத்திற்கொண்டு தமது உற்பத்திகளை பெருக்கி தேவைகளை தாமே பூர்த்தி செய்வதற்கு தமிழ் மக்களை
ஊக்கப்படுத்தி விவசாய அபிவித்திக்கு தேவையான நிபுணத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கை பொறுத்தவரை அரசாங்கத்தின் அறிவிப்புக்களும் நிவாரண நடவடிக்கைகளும் மந்தகதியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனால் அரசசார்பற்ற நிறுவனங்களும் , தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தாயகத்தில் தமிழ் மக்களுக்கு விரைந்து உதவும் புலம்பெயர் உறவுகளும் கோவிட்-19 தாக்கத்தால் முடக்கமடைந்துள்ள நிலையி;ல், விவசாய பொருளாதாரத்தை முதன்மையாக கொண்ட தாயக உறவுகள் உற்பத்திகளைப் பெருக்கி தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் சுரேந்திரன் குருசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

![]() |
| சுரேந்திரன் குருசுவாமி |

Comments
Post a Comment