அனைத்துலக ரீதியாக கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது இலட்சத்தைக் கடந்துள்ளது.
கனடிய நேரம் இன்று காலை ஆறு மணியளவில் Johns Hopkins பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது இலட்சத்து எட்டாயிரத்து ஐநூற்றி இருபத்தேழாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து முன்னூற்று முப்பத்து மூன்றாக காணப்படுகின்றது.
கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஒன்பது இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் பேர் நுண்மித் தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஐம்பத்தினான்காயிரத்து நூற்றி அறுபத்தொரு பேர்(54161) மரணித்துள்ளனர்.
ஸ்பெயினில் நுண்மித் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 223,759 ஆகவும் மரணமானவர்களின் எண்ணிக்கை 22902 ஆகவும், இத்தாலியில் தொற்றுக்குள்ளானவர்கள் 195351 ஆகவும் மரணமானவர்களின் எண்ணிக்கை 26384 ஆகவும் காணபப்டுகின்றன.
பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்கள் 161,644 பேர் என்றும் மரணித்தோர் 22614 ஆகவும், ஜேர்மனியில் முறையே 156,513 பேர் தொற்றுக்குள்ளாகியும் 5877 பேர் மரணித்தும் உள்ளனர்.
பிரித்தானியாவில் 149,569 பேர் தொற்றுக்குள்ளாகியும் 20319 பேர் மரணித்தும் உள்ளனர்.
துருக்கியில் நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து எட்டாயிரத்தைக் கடந்துள்ளதுள்ளதுடன் 2706 பேர் வரை உயிரிழந்தும் உள்ளனர்.
கனடாவில் நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45354 ஆகவும் மரணித்தோர் 2465 ஆகவும் புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
சீனாவில் நேற்று இனம் காணப்பட்ட 11 புதிய தொற்றுக்களுடன் 84325 பேர் தொற்று உறுதி செய்யபப்பட்டிருந்ததுடன் 4642 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன. 77346 பேர் முற்றாக குணமடைந்துள்ளதாகவும், கோவிட்-19 தொற்று உருவான குபே மாகாணத்தின் வூஹானில் தொற்றால் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் முற்றாக குணமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment