Skip to main content

வூஹான் ஆய்வுகூடத்தில் கோவிட்-19 உருவாக்கம் - ட்றம்ப் குற்றச்சாட்டு

கோவிட்-19 கொறோனா நுண்மியானது சீனாவின் குபே மாகாணத்தின் வூஹானில் உள்ள நுண்மித் தொடர்பான ஆய்வு கூடமான The Wuhan Institute of Virology இல் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்றம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவைக் கடந்த அனைத்துலக ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொறோனா நுண்மித் தொற்றை, சீனாவால் நிறுத்த முடியவில்லை அல்லது தொடர்ந்து பரவட்டும் என்றே விட்டுள்ளது என, இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

எனினும் சீனா மீதான அவரது குற்றச்சாட்டு தொடர்பில் இருக்கக் கூடிய ஆதாரம் குறித்து, ட்றம்ப் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் நொவெம்பரி;ல் நடைபெறவுள்ள அமெரிக்க குடியரசுத் தேர்தலில் தன்னை தோற்கடிக்க, சீனா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் ட்றம்ப், குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில், சீனாவின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது மேலும் வரி அதிகரிப்பை மேற்கொள்ளப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் இந்த விடயம் தொடர்பில் தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இன்றும் முக்கிய பல விடயங்களை அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

எனினும் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் குறுக்கிடும் எந்த நோக்கமும் சீனாவுக்கு இல்லை என்று கோடிட்டு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே, சீனா மீது ட்றம்ப் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக, சீன அரச அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய புள்ளி விபரங்களின் படி, கொறோனா தொற்றால் அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர்(1,079,780) பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் அறுபதினாயிரத்துக்கும் அதிகமானோர்(63,515) மரணித்தும் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...