Skip to main content

கோவிட் 19: இருபத்தாறாயிரத்தைக் கடந்த இந்தியா

இந்தியாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரத்தைக்(26,000) ஐக் கடந்துள்ளது.

இந்தியாவில் உள்ளுர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடளாவிய ரீதியில் 811 தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26270 ஆக உயர்வடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 824 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5210 பேர் குணமடைந்துள்ளனர்.

கொறோனா நுண்மித் தொற்றால் உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளதுடன், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநிலங்களில் பதிவாகியுள்ள புள்ளிவிபரங்களின் படி, மஹாராஷ்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 1715 தொற்றுக்களுடன் மொத்த எண்ணிக்கை 7628 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தொற்றுக்கள் அம்மாநிலத்தில் பதிவாக இரண்டாவது அதிகூடிய பதிவாக காணப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை 1755 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.

அங்கு 323 பேர் உயிரிழந்துள்ளதுடன், 840 பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.

இரண்டாவதாக, குஜராத் மாநிலத்தில் சுமார் 3071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 133 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை 265 பேர் குணமடைந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில், தமிழகத்தில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 27 செய்தியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் சுமார் 960 பேர் முற்றாக குணமடைந்துள்ளதுடன், 23 பேர் மரணித்தும் உள்ளனர். இதுவரை 80110 இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர பிரதேசத்தில் 61 புதிய தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், அங்கு இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1016 உயர்வடைந்துள்ளது. இவர்களில் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறே, உத்தரப் பிரதேசத்தில் 1621 தொற்றுக்களும் 25 மரணங்களும் சம்பவித்துள்ளன. இந்நிலையில் எதி;ர்வரும் ஜூன் 30ம் நாள்வரை, எவ்வித பொதுக்கூட்டங்களோ, ஒன்று கூடல்களோ மேற்கொள்ள தடைவிதி;க்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2059 ஆக பதிவாகியுள்ளது. இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 25 தொற்றுக்களும் இதில் உள்ளடங்குகிறது.
இவர்களில் 493 பேர் குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...