யாழ்ப்பாணம் முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் சுகவீனமுற்ற நிலையில் இன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இவரது சகோதரனுக்கு கொறோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இப்பெண்மணி கடந்த ஏப்ரல் 11ம் நாள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஏழு பேர் மரணித்துள்ளதுடன் 154 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவ்வாறே நேற்றைய தினமும் 53 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று அடையாளம் காணப்பட்டது.

Comments
Post a Comment