Skip to main content

பொய் கூறி யாழ் நுழைந்த மதபோதகர் கோவிட்-19 நோய்காவி

கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்றைப் போக்க பிரார்த்தனை என்ற பெயரில் பொய் கூறி யாழ்ப்பாணம் சென்றிருந்த சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த மதபோதகர், ஓர் நோய்காவி என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் 

யாழ்ப்பாணத்தில் கொறொனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட சமுதாய மருத்துவ அதிகாரி முரளி வல்லிபுரநாதன் நேற்று ஊடகவியலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சென்ற வேளையில் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்த போதும், விமானநிலையத்தில் பொய் கூறியுள்ளதாக மதபோதகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆராதனையில் 150 மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், பின்னர் அவர்களில் 7 பேருக்கு தொற்று இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதாக மருத்துமவர் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் போதகரின் ஆராதனையி;ல் கலந்து கொண்டோரை இனம் கண்டு, தனிமைப்படுத்தியதன் மூலம் பரவலை ஓரளவிற்கு கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புதிய பரிசோதனைகளில் புதிதாக எவரும் நோய் தொற்றுடன் காணப்படவில்லை. ஆனாலும் அபாயம் நீங்கிவிட்டதாக கருத முடியாதென தெரிவித்த அவர் ஆனையிறவு, பூநகரில் கண்காணிப்பு சோதனை சாவடிகளை அமைப்பதன் மூலம் புதிய தொற்றாளர்கள் மற்றும் காவிகளை வடிகட்டுவதன் ஊடாக முன்னுதாரணமான நோய் அற்ற பிரதேசமாக யாழ்ப்பாணத்தை அறிவிக்கலாமெனவும்; அவர் தெரிவித்தார்.

மேலும், வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை முன்னெடுக்க கூடிய பகுதிகள் தொடர்;பில் தாங்கள் பரிந்துரைகளை அரசிடம் செய்திருப்பதாகவும் அரசு இறுதி முடிவை எடுக்குமெனவும் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்திருந்தார்.

Comments

  1. மனிதர்நாம் மனிதராகவே வாழ்வாே ம்.
    சிந்தனை செய்மனமே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...