Skip to main content

ராஜிவ் காந்தி கொலைவழக்கு கைதி முருகனின் தந்தை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான முருகனின் தந்தை இலங்கை நேரப்படி இன்று திங்கட்கிழமை ஏப்ரல் 27ம் நாள் அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

83 அகவையுடைய முருகனின் தந்தை வைரவப்பிள்ளை வெற்றிவேலு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்த செய்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தனது தந்தையுடன் கானொளி தொடர்பாடல் ஊடாக பார்த்து பேச மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில் அவசர மனு அனுப்பியிருந்தார்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று காரணமாக பிற கைதிகளுக்கு காணொளி தொடர்பாடல் வழியாக  அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், எனவே தனக்கும் அதுபோன்று அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் முருகன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், முருகன் தனது தந்தையை கடைசியாக பார்க்காத நிலையில், இன்று அதிகாலை வெற்றிவேல் சாவகச்சேரி தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள்.
இவர்கள் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யும் பிரேரணையை முன்னாள் முதல்வர் அமரர் ஜெயலலிதா நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பிய போதும் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால், மீண்டும் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டபோதும், இதுவரை ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் ஏழு பேரின் விடுதலையும் விடுதலை பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.
இந்நிலையில் முருகனின் தந்தையின் இறுதிச் சடங்கை காணொளி தொடர்பாடல் மூலம் அவர் பார்க்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலதிக தகவல்:


அமரர் வெற்றிவேலுவின் உடலம் அவரின் சொந்த இடமான கிளிநொச்சி பளை இத்தாவிலுவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் நேரப்படி நாளை காலை 10.30 க்கு அரசர் கேணி புன்னையடி புன்னையடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...