Skip to main content

கொலை செய்ய பெயர்பட்டியல் தயார் செய்திருந்த நோவா ஸ்கோஷிய துப்பாக்கிதாரி!

நோவா ஸ்கோஷியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 பேரைக் கொன்ற பல்மருத்துவர், தான் கொலை செய்ய திட்டமிட்டு தயார்படுத்திய பெயர்ப் பட்டியல் கண்டறியப்பட்டு;ள்ளது.

நோவா ஷ்கோஷ்யாவின் வடக்கில் இருந்து ஹலிஃபக்ஸ்க்கு  அருகில் உள்ள Portapique இல் இருந்து 100 கிலோமீற்றர் வரையான Enfield வரை, கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிறு நண்பகல்வரை இடம்பெற்ற பல சம்பவங்களில் 51 அகவையுடைய கேப்றியல் வோர்ட்மன் (Gabriel Wortman) என்பவர் ஆர்சீஎம்பி பெண் அதிகாரி ஒருவர் உட்படப் 22 பேரைச் சுட்டுக் கொன்றாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பின்னர், அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனேடிய வரலாற்றில் மிக அதிகமானவர்கள் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவமாக இது அமைகிறது.

இதற்கு முன்னதாக, 1989 ஆம் ஆண்டு மொன்றியோல் இகோல் பொலிதெக்னீக்கில் துப்பாக்கி நபர் ஒருவர் 14 பெண்களைச் சுட்டுக் கொன்றமையே கனடாவில் இதுவரை மிகப் பெரும் எண்ணிக்கையானோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமாக அமைந்திருந்தது.

நோவா ஷ்கோஷ்யா சம்பவம் தொடர்பில் ஆர்சீஎம் மேற்கொண்டுவரும் விசாரணையில், துப்பாக்கிதாரி வோர்ட்மன் பயன்படுத்திய துப்பாக்கி சட்டவிரோதமானது என்றும், அதற்கான முறைப்படியான சட்டபூர்வமான உரிமத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிதாரி ஆர்சீஎம்யினர் பயன்படுத்தும் வாகனம் போன்றதொரு காரை வர்ணம் தீட்டியிருந்ததுடன், ஆர்சீஎம்யினரின் சீருடை போன்ற ஆடையையும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில், தீயில் எரிந்த ஐந்து வீடுகள் உட்படப் 16 இடங்களில் குற்றங்கள் புரியப்பட்டதாகவும், மேலும் உடலங்கள் மீட்கப்படக் கூடுமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலையாளி உட்பட மரணமானோரின் எண்ணிக்கை 23 என்று அறிவிக்கப்பட்டது. பதினேழு அகவையுடைய பெண் ஒருவரும், அவரது பெற்றோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

Pic from CBC Nova Scotia 
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஆர்சீஎம்பி பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...