Skip to main content

நோவஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு, 17 பேர் பலி.

கனடாவின் கிழக்கே, நோவஸ்கோஷியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆர்.சி.எம்.பி அதிகாரி ஒருவர், மற்றும் துப்பாக்கிதாரி உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

@RCMP Twitter- Gabriel Wortman
நோவஸ்கோஷியாவில் உள்ள கிராமப்புறப் பகுதியான Portapique  இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

51 அகவையுடைய ஹேபிரியல் வோட்மன் (Gabriel Wortman) என்ற பல்மருத்துவரே இக்கொலையாளி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை என்று 12 மணித்தியாலங்கள் தொடர்ந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பல குடும்பங்கள் தமது உறவுகளை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

@RCMP Twitter-Const.Heidi Stevenson
இச்சம்பவத்தில் உயிரிழந்த 23 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர்சீஎம்பி அதிகாரி ஹெய்டி ஸ்ரீவன்சன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி ஆர்சீஎம்பி அதிகாரிகளின் வாகனத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளதுடன், சீரூடையையும் அணிந்திருந்தார்.
@RCMP Twitter

ஆயுததாரியை கைது செய்துள்ளதாக அறிவித்த நோவஸ்கோஷியா காவற்துறையினர் பின்னர், அவரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் மற்றுமொரு ஆர்சீஎம்பி உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்;.

துப்பாக்கிதாரியான குறித்த பல்மருத்துவர் Dartmouth இல் ஓர் சொந்தமான பல்மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 2014ம் ஆண்டு புற்றுநோய் தடுப்புப் பிரிவுக்கு நன்கொடை அளித்துள்ளார்.

மிகுந்த உதவி செய்யக்கூடிய மனோபாவம் கொண்ட வோர்ட்மன், எளிமையாகவும் அன்பாகவும் அனைவருடனும் பழகும் தன்மை கொண்டவராக காணப்பட்டதாக, அயலவர்கள் மற்றும் நண்பர்கள் குறிப்பிட்டு;ள்ளனர்.

எனினும் இவ்வாறான ஓர் கொடூரமான கொலைச்சம்பவத்தை அவர், புரிந்துள்ளார் என்பதை நம்பமுடியவில்லை என்று அவருடன், கல்விபயின்ற ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகள் பின்புலமாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது என்று தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர், விசாரணையின் ஆரம்ப நிலையில் எதனையும் உறுதியாக கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...