Skip to main content

அவசரகால நிலைப் பிரகடணத்தை மீறிய குற்றத்கு 880 டொலர் தண்டம்.

ஓக்வில்லைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட்-19 அவசரகால நிலைப் பிரகடணத்தை மீறிய குற்றச்சாட்டில் ஒண்டாரியோ காவற்துறையால் 880 கனடிய டொலர் தண்டச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கொறொனா கொல்லுயிரியைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்டாரியோ மாகாண அரசால் அவசரகால நிலைப்பிரகடணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் அன்றி வீட்டை விட்டு வெளியேறவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளியிடங்களில் ஒன்று கூடுவது, முகாமிடல், சமூக இடைவெளியைப் பேணுவது உள்ளிட்ட பல்வேறு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து நகரசபையால் நிர்வகிக்கப்படும் வாசிசசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு மையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்டாரியோவின் தெற்கே ஓக்விலே நகரில் கோவிட்-19 அவசரகாலநிலைப் பிரகடணத்தை மீறிய குற்றத்திற்காக 880 கனடிய டொலர் தண்டச்சீட்டு மாகாண காவற்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

ரொட் நெல்சன் என்ற குடும்பத்தர் அவர்களது வதிவிடத்துக்கு அண்மையில் உள்ள கலாச்சார மையம் ஒன்றின் வாகனதரிப்பிடத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் விளையாடக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சென்ற காவற்துறை அதிகாரி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் அந்த வாகன தரிப்பிடத்தில் வேறு எவரும் இல்லை என்றும், பிள்ளைகள் பொழுதைப் போக்கின்றனர் என்று நெல்சன் தெரிவித்தபோது, அவசரகால நிலைச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 880 கனடிய டொலர் தண்டச்சீட்டை காவற்துறை அதிகாரி வழங்கியுள்ளார்.

இதேவேளை இந்த இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு, அனைவரது நன்மை மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும், பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் நகர முதல்வர் ரொப் பேர்ட்டன் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...