ஓன்டாரியோ மாகாண அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இயங்கும்பள்ளிக்கூடங்கள் எதிர்வரும் மே 31ம் நாள் வரை மூடப்பட்டிருக்கும் என்று இன்று மாகாண அரசு அறிவித்தது.
கடந்த மார்ச் விடுமுறையுடன் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்கைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள், பின்னர் மே 4ம் நாள் வரை நீடிக்கப்பட்டது
இந்த நிலையில், தொடர்ந்தும் கோவிட்19 இன் தாக்கம் இருப்பதால், மே 31ம் நாள் வரை மூடுவதாக மாகாண கல்வியமைச்சர் ஸ்ரீஃபன் லெச்சே (Stephen Lecce) இன்று அறிவித்தார்.
சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவம், தேவைப்பட்டால், இந்தத் காலஎல்லை மேலும் நீடிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக லெச்சே செய்தியாளர்களிடம் கூறினார்.
இதேவேளை கடந்த ஏப்ரல் 06ம் நாள் முதல் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment