பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் இழப்பீட்டை வழங்குமாறு ஒஸ்திரேலிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஓஸ்திரேலியாவில் ஏதிலித் தஞ்சம் கோரியுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் டொலர் இழப்பீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒஸ்திரேலியாவில் தமது ஏதிலிக் கோரிக்கைக்காக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக போராடும் நடேஸ் எனப்படும் நடேசலிங்கம் முருகப்பன், அவரது மனைவி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகள் விடயத்தில் நம்பிக்கை கொடுக்கும் ஓர் தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 17) வழங்கியது.
போர் காரணமாக ஒஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற நடேஸ், பிரியா திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு நான்கு மற்றும் இரண்டு வயதி;;ல் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மத்திய குயிஸ்லாந்தின் பிலோய்லா (Biloela) நகரில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது பாதுகாப்பு வீசா முடிவடைந்த நிலையில், அவர்களது ஏதிலிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஓகஸ்ட் 29 நாள் சிறப்பு விமானம் ஒன்றில் மெல்போனில் இருந்து ஏற்றப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில், இளைய மகள் தருணிகா சார்பில் உச்ச நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து நாடுகடத்தும் உத்தரவு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானம், டார்வின் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், நடுவண் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தொடர்பி;ல் இரண்டு மாதங்களின் பின்னர், கடந்த ஏப்ரல் 17ம் நாள் நீதிபதி மார்க் மொஷின்ஸ்கீ (Mark Moshinsky) வழங்கிய தீர்ப்பில், இளைய மகள் தருணிகாவின் பாதுகாப்பு வீசா விண்ணப்பம், நியாயமான முறையில் கையாளப்படவில்லை என்று தீர்ப்பளித்தார்.
ஓஸ்திரேலியாவி;ல் தற்போதுள்ள சட்ட இறுக்கங்களின் பிரகாரம், படகுகளில் ஒஸ்திரேலியா செல்வோர் பாதுகாப்பு வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் விசேட தேவைகளின் பிரகாரம் உள்துறை மற்றும் குடிவரவு அமைச்சருக்கு பாதுகாப்பு வீசாங்களை வழங்கும் அதிகாரம் உள்ளது.
எனினும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பம் உரிய முறையால் கையாளப்படவில்லை என்பதே நீதிபதியின் தீர்பாக அமைந்துள்ளது.
மேலும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிக்காக நீதிமன்றில் போராடிவரும் நிலையில், இழப்பீடாக 206,934.33 டொலரை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கிறிஸ்மஸ் தீவில் கடந்த ஓகஸ்ட் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினருக்கு கொறொனா நுண்மித் தொற்றுத் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments
Post a Comment